Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நாட்டை பாதுகாக்க மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு ரிலையன்ஸ் துணை நிற்கும்.. முகேஷ் அம்பானி உறுதி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 25, 2025
in அரசியல் செய்திகள்
0
நாட்டை பாதுகாக்க மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு ரிலையன்ஸ் துணை நிற்கும்.. முகேஷ் அம்பானி உறுதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:May 08, 2025 9:19 PM IST

இந்தியா அமைதியை நாடுகிறது. ஆனால் அதன் பெருமை, பாதுகாப்பு, இறையாண்மைக்கு பிரச்னை என்றால் தக்க பதிலடியை இந்தியா கொடுக்கும்.

முகேஷ் அம்பானிமுகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ரிலையன்ஸ் எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று அதன் சேர்மன் முகேஷ் அம்பானி உறுதி அளித்துள்ளார்.

பெகல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அதிரடி தாக்குதலை தொடுத்து வருகிறது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை தற்போது ஏற்படுத்தி வருகிறது.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய அரசு உள்நாட்டில் பலப்படுத்தி உள்ளது. தற்போதைய சூழலில் பாகிஸ்தானுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் தலைவர் முகேஷ் அம்பானி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்ட நமது இந்திய ராணுவத்தை எண்ணி நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். அனைத்து வகையான பயங்கரவாதத்தின் கொடுமைக்கு எதிராக இந்தியா ஒற்றுமையாகவும், அசைக்க முடியாத சக்தியாகவும் உயர்ந்து நிற்கிறது.

பிரதமர் மோடியின் துணிச்சலான, உறுதியான தலைமையின் கீழ் பாகிஸ்தானின் ஒவ்வொரு அத்து மீறலுக்கும் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்திருக்கிறது.

பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இந்தியா ஒருபோதும் அமைதியாக இருக்காது என்பதையும், நமது மண்ணில், நமது பொதுமக்கள் மீது அல்லது நமது நாட்டைப் பாதுகாக்கும் துணிச்சலான ஆண்கள் மற்றும் பெண்கள் மீது ஒரு தாக்குதலையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்பதையும் பிரதமர் மோடியின் தலைமை நிரூபித்துள்ளது.

இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொள்ளும் எந்த நடவடிக்கையையும் ரிலையன்ஸ் குடும்பம் ஆதரிக்க தயாராக உள்ளது. இந்தியா அமைதியை நாடுகிறது. ஆனால் அதன் பெருமை, பாதுகாப்பு, இறையாண்மைக்கு பிரச்னை என்றால் தக்க பதிலடியை இந்தியா கொடுக்கும்.

ஒன்றாக நின்று போராடுவோம். வெற்றி பெறுவோம். ஜெய்ஹிந்த் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

நாட்டை பாதுகாக்க மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு ரிலையன்ஸ் துணை நிற்கும்.. முகேஷ் அம்பானி உறுதி



.

Previous Post

கோவை ரெட் அலர்ட் அப்டேட் – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

Next Post

’மத்திய வரிகளில் மாநிலத்திற்கு 50% வேண்டும்’- நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
’மத்திய வரிகளில் மாநிலத்திற்கு 50% வேண்டும்’- நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?

’மத்திய வரிகளில் மாநிலத்திற்கு 50% வேண்டும்’- நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In