Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பிரதமர் மோடி உடன் முதல் வரிசையில் இடம் பிடித்த முதல்வர் ஸ்டாலின்.. கவனம் பெறும் நிதி ஆயோக் குழு புகைப்படம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 24, 2025
in அரசியல் செய்திகள்
0
பிரதமர் மோடி உடன் முதல் வரிசையில் இடம் பிடித்த முதல்வர் ஸ்டாலின்.. கவனம் பெறும் நிதி ஆயோக் குழு புகைப்படம்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:May 24, 2025 2:35 PM IST

நிதிஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியின் அருகில் முதல் வரிசையில் இடம்பிடித்தது கவனம் ஈர்த்தது. 2047-ல் இந்தியா வளர்ந்த நாடாக மாற மாநிலங்களின் பங்கு குறித்து விவாதம் நடந்தது.

News18News18
News18

நிதிஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதில் முதல்வர் ஸ்டாலினுக்கு முதல் வரிசையில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு அடுத்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடம்பிடித்துள்ளது அனைவரின் கவத்தை ஈர்த்துள்ளது.

திட்டக்குழுவுக்கு மாற்றாக கடந்த 2015 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நிதி ஆயோக் அமைப்பின் 10 ஆவது கூட்டம் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில், அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் கலந்து கொள்வார்கள். அந்த வகையில், நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். இந்தக் கூட்டத்தில், 2047-ஆம் ஆண்டில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் மாநில அரசின் பங்கு குறித்து நிதிஆயோக் அதிகாரிகள் எடுத்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து, மாநில முதல்வர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். முன்னதாக டெல்லியில் உள்ள பொதிகை இல்லத்தில் இருந்து பாரத் மண்டபத்திற்கு புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காவல் துறையினர் மரியாதை செலுத்தினர்.

கடந்தாண்டு நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளாத நிலையில், தற்போது அவர் பங்கேற்றுள்ளார். அதே போன்று, தெலங்கானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநில முதலமைச்சர்களும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். ஆனால், கர்நாடகா, கேரளா, பிகார், மேற்குவங்கம் ஆகிய மாநில முதலமைச்சர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு பதிலாக அம்மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், மத்திய அரசு தர வேண்டிய நிதியை விடுவிக்க இக்கூட்டத்தின் வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டம் முடிந்த பிறகு இன்று மாலை 4.30 மணி அளவில் பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார். அதனை தொடர்ந்து மாலை 6 மணி அளவில், டெல்லி விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்க உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதி ஆயோக் கூட்டத்தில் நிகழ்ந்தது குறித்து விளக்கம் அளிக்க உள்ளார்.

முன்னதாக, நிதிஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதில், முதல் வரிசையில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு அடுத்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடம்பிடித்தார். மேலும், முதல் வரிசையில் இடதுபுறமாக பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு அடுத்து ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இடம்பிடித்தார்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

பிரதமர் மோடி உடன் முதல் வரிசையில் இடம் பிடித்த முதல்வர் ஸ்டாலின்.. கவனம் பெறும் நிதி ஆயோக் குழு புகைப்படம்



.

Previous Post

Niti Aayog: "இது குழந்தைகளின் கல்வியைப் பாதிக்கிறது!" – நிதி ஆயோக் கூட்டத்தில் ஸ்டாலின் உரை!

Next Post

கோவை ரெட் அலர்ட் அப்டேட் – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கோவை ரெட் அலர்ட் அப்டேட் – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கோவை ரெட் அலர்ட் அப்டேட் - மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In