இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக இளம்வீரர் ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்விருக்கும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்தத் தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், நட்சத்திர ஆட்டக்காரரும் முன்னாள் கேப்டனுமான விராட் கோலியும் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
இதனால், இந்திய அணியின் புதிய கேப்டன் யார்? என்ற சந்தேகம் எழுந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் தொடரில் துணை கேப்டனாகவும் சில போட்டிகளில் பொறுப்பு கேப்டனாகவும் இருந்த ஜஸ்பிரீத் பும்ரா, கே.எல். ராகுல், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஆகியோரில் ஒருவருக்கு கேப்டன் பதவி கொடுக்கப்படும் என்ற நிலையில் புதிய கேப்டனாக 25 வயதான இளம் வீரர் ஷுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டுள்ளது. துணை கேப்டனாக ரிஷப் பந்த் நியமியக்கப்பட்டுள்ளார்.
