Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“இந்தியில் மட்டுமே பேசுவேன்” அடம்பிடித்த பெண் வங்கி மேலாளர் கன்னடத்தில் மன்னிப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 23, 2025
in அரசியல் செய்திகள்
0
“இந்தியில் மட்டுமே பேசுவேன்” அடம்பிடித்த பெண் வங்கி மேலாளர் கன்னடத்தில் மன்னிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:May 22, 2025 3:39 PM IST

பாரத ஸ்டேட் வங்கி பெண் மேலாளர், “இந்தியில்தான் பேசுவேன்” என்ற கருத்துக்கு மன்னிப்பு கேட்டார். கர்நாடகாவில் இந்தி-கன்னட மொழி பிரச்சனை மீண்டும் எழுந்துள்ளது.

பெண் வங்கி மேலாளர்பெண் வங்கி மேலாளர்
பெண் வங்கி மேலாளர்

“இது இந்தியா, கன்னடத்திலோ, ஆங்கிலத்திலோ பேசமாட்டேன், இந்தியில்தான் பேசுவேன்” என்று அடம்பிடித்த பாரத ஸ்டேட் வங்கி பெண் மேலாளர் தற்போது கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

கர்நாடகாவில் சமீபகாலமாக மாநில மொழி கன்னடத்திற்கும், இந்தி மொழிக்கும் இடையேயான பிரச்சனை அவ்வப்போது எழுந்துவருகிறது. குறிப்பாக தேசியக் கல்வி கொள்கையில் மூன்றாவது மொழி தொடர்பான விவாதம் எழுந்ததில் இருந்து அம்மாநிலத்தில் மொழி குறித்தான பிரச்சனைகள் இன்னும் தீவிரமாக எழுந்துவருகிறது.

இந்த வரிசையில் இணையத்தில் வெளியான ஒரு காணொளி மீண்டும் கர்நாடகா மாநிலத்தில் இந்தி – கன்னட மொழி பிரச்சனையை காட்டியது. அந்த வீடியோவில், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள சந்தபுரா எஸ்பிஐ வங்கி கிளையில் வாடிக்கையாளர் ஒருவர் கன்னடத்தில் பேசியுள்ளார். அதற்கு அந்த கிளை மேலாளர் இந்தியில் பதில் கொடுத்துள்ளார். அப்போது அந்த வாடிக்கையாளர் இது கர்நாடகா நீங்கள் எங்கள் மொழியில் தான் பேச வேண்டும் என சொல்ல, அந்த வங்கி மேலாளரோ, “நான் ஒருபோதும் கன்னடத்தில் பேச மாட்டேன். இந்தியில் தான் பேசுவேன்” என அவரிடம் கூறியிருக்கிறார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

ಇದನ್ನ ಕ್ಷಮೆ ಕೇಳೋದು ಅಂತಾರ..?

ಹಲ್ಲು ಕಿಸ್ಕೊಂಡು ಬೇಕಾಬಿಟ್ಟಿ ಕಾಟಾಚಾರಕ್ಕೆ ಕೇಳುವ ಈ ಕ್ಷಮೆ ನಮಗೆ ಬೇಕಾಗಿಲ್ಲಾ..😡

ಈಕೆಗೆ ಈಕೆಯ ದುರಹಂಕಾರದ ಮಾತಿನ ಬಗ್ಗೆ ಪಶ್ಚತ್ತಾಪ ಕಾಣ್ತಿಲ್ಲ ಆಗಿರೋ ದುರಂತದ ಬಗ್ಗೆ ಅರಿವೇ ಇಲ್ಲಾ..@TheOfficialSBI ಕ್ಷಮೆ ನಿಮ್ಮ ಅಧಿಕೃತ ಪುಟದಿಂದ ಬರಬೇಕು ಹಾಗೂ ಈಕೆಯನ್ನು ಕೆಲಸದಿಂದ ವಜಾ ಮಾಡಬೇಕು..✊😡 https://t.co/eytTSUmRMR pic.twitter.com/pkZJ4rkLQO


— ಚೇತನ್ ಸೂರ್ಯ ಎಸ್ – Chethan Surya S (@Chethan_Surya_S) May 21, 2025

இந்த வீடியோ வெளியான நிலையில், பெண் மேலாளரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து கண்டனங்கள் குவிந்தன. குறிப்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, தனது எக்ஸ் பக்கத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்ததுடன், உள்ளூர் மக்களை மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், தனது செயலுக்கு கன்னட மொழியிலேயே பெண் மேலாளர் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த சூழலில் புகாருக்கு ஆளான அந்த பெண் மேலாளரை பணியிட மாற்றம் செய்து பாரத ஸ்டேட் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.



.

Previous Post

‘அண்ணன் சீமானைவிட சில விஷயங்களில் வேல்முருகன் ஒருபடி மேல்!’ – சொல்கிறார் நாதக நத்தம் சிவசங்கரன்!

Next Post

தவெகவும்.. பாஜகவும் ஒண்ணு.. திமுகவில் இணைந்த கோவை வைஷ்ணவி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தவெகவும்.. பாஜகவும் ஒண்ணு.. திமுகவில் இணைந்த கோவை வைஷ்ணவி

தவெகவும்.. பாஜகவும் ஒண்ணு.. திமுகவில் இணைந்த கோவை வைஷ்ணவி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In