Last Updated:
நேஷனல் ஹெரால்டு பணமோசடியில் சோனியா மற்றும் ராகுல் காந்தி தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சுமத்தியது. 2,000 கோடி ரூபாய் சொத்துகளை 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியதாக வழக்கு நடக்கிறது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் நடந்த பணமோசடியில் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி பலனடைந்ததாக டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றம் சுமத்தியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு சொந்தமான 2ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வெறும் 50 லட்சம் ரூபாய்க்கு யங் இந்தியன் நிறுவனம் வாங்கியது தொடர்பாக 2015ஆம் ஆண்டு முதல் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் டெல்லியில் நடந்து வரும் வழக்கு சிறப்பு நீதிபதி விஷால் காக்னே தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பான ஆவணங்களை பாஜக எம்பி சுப்பிரமணியன் சாமிக்கு வழங்க அமலாக்கத்துறைக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.
ஆவணங்களை வழங்க காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.
இந்த நிலையில், 142 கோடி ரூபாய் அளவுக்கு மோசடியில், ராகுல்காந்தி மற்றும் சோனியாகாந்திக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
Delhi Cantonment,New Delhi,Delhi

