Last Updated:
இந்த தீர்ப்பு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நீதித்துறை பணி நியமனத்துக்கு பொருந்தாது என்றும் அடுத்த முறை தொடங்கப்படும் நியமன நடைமுறையில் இந்த தீர்ப்பு பொருந்தும் என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
சிவில் நீதிபதிகள் தேர்வுக்கு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றியிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நீதிபதிகள் நியமனம் மற்றும் தேர்வு குறித்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி, பி.ஆர். கவாய், நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தனர். அப்போது, சிவில் நீதிபதிகள் தேர்வு எழுதுவதற்கு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்ற வேண்டும் என்று நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.
சிவில் நீதிபதிகள் தேர்வுக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியிருக்க வேண்டும் என்று மத்திய அரசு அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதனை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.
இருப்பினும், இந்த தீர்ப்பு ஏற்கனவே தொடங்கி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நீதித்துறை பணியமர்த்தலுக்கு பொருந்தாது. அதன்படி, உயர்நீதிமன்றங்கள் ஏற்கனவே ஜூனியர் பிரிவு சிவில் நீதிபதிகள் நியமன நடைமுறையைத் தொடங்கியுள்ளதால், தற்போதைய நியமனத்துக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில் குறைந்தபட்ச நடைமுறைத் தேவை பொருந்தாது.
அதேவேளையில், அடுத்த முறை தொடங்கப்படும் நியமன நடைமுறையில் இருந்து இந்த தீர்ப்பு பொருந்தும் என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
Delhi,Delhi,Delhi

