Last Updated:
23 வயது அனுராதா பாஸ்வான் 25 ஆண்களை திருமணம் செய்து கொள்ளையடித்ததாக ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர். “லூட்டிங் பிரைட்” என அழைக்கப்படும் அவர், கும்பலுடன் சேர்ந்து ஆண்களை ஏமாற்றியுள்ளார்.
போபாலை சேர்ந்த 23 வயது பெண்ணை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர். இவர் ஏழு மாதங்களில் 25 வெவ்வேறு ஆண்களை அவர் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது திருமணத்தின் பெயரால் நடந்த மோசடி வழக்கு. அந்தப் பெண்ணின் பெயர் அனுராதா பாஸ்வான். போலீசார் அவளை “லூட்டிங் பிரைட்” என்று அழைக்கிறார்கள். இதன் பொருள், அவள் திருமணம் செய்துகொண்டு, பின்னர் கொள்ளையடித்து ஓடிவிடுவாள். அனுராதா ஒரு பெரிய கும்பலை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. திருமண ஆசையில் இருந்த ஆண்களை இந்தக் கும்பல் குறிவைக்கும். அந்த ஆண்களை திருமணம் செய்து கொண்ட பிறகு, அனுராதா அவர்களின் விலைமதிப்பற்ற பொருட்களை திருடிக்கொண்டு ஓடிவிடுவாள்.
அவள் ஒவ்வொரு ஊருக்குச் செல்லும்போது, ஒரு புதிய பெயரை வைத்துக் கொள்வார். அவர் ஆண்களை ஏமாற்றி திருமண செய்து கொண்டு, சிறந்த மருமகளாக நடித்து, அவர்களிடமிருந்து நகைகள் மற்றும் பணத்தை எடுத்துச் சென்றுவிடுவார். இவ்வாறு போலி திருமணங்களில் ஈடுபட்ட பெண்ணை சவாய் மாதோபூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
அனுராதா தான் செல்லும் இடமெல்லாம் தன்னை பற்றி அறிமுகப்படுத்திக் கொள்வார். அதாவது தான் தனிமையில் இருப்பதாகவும், ஏழைப் பெண் என்றும், ஆதரவற்ற பெண் என்றும், வேலையில்லாத சகோதரன் இருக்கிறான் என்றும், திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாகவும், நிதி நெருக்கடிகள் இருப்பதாகவும் நாடகம் ஆடியுள்ளார்.
திருமணத்திற்காகக் காத்திருக்கும் நபர்களிடம் அந்தக் கும்பலில் உள்ள உறுப்பினர்கள் அவருடைய புகைப்படங்களையும், ப்ரொஃபைலையும் எடுத்துச் செல்வார்கள். திருமண புரோக்கரும் அந்த கும்பலில் உள்ள ஒரு உறுப்பினர் ஆவார். திருமண ஏற்பாடு செய்வதாகச் சொல்லி, புரோக்கராக நடித்த நபரும் 2 லட்சம் வாங்குகிறார்.
எல்லாம் முடிந்த பிறகு, திருமணம் நிச்சயிக்கப்படும். திருமண ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், திருமணம் கோவிலிலோ அல்லது வீட்டிலோ நடைபெறும். இந்த திருமணமானது பாரம்பரியம் மற்றும் பழக்க வழக்கங்களின்படி நடைபெறும். இவர்கள் மணமகனிடமும், அவர் குடும்பத்தினரிடமும் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்வார்கள். திருமணத்திற்கு பிறகு பஸ்வான் தனது திட்டத்தை சில நாட்களுக்குள் செயல்படுத்துவார். வீட்டில் உள்ளவர்களுக்கு போதை மருந்து கலந்த உணவை கொடுத்து, பின்னர் தங்கம், பணம் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்கள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுவிடுவார்.
இது தொடர்பாக, சவாய் மாதோபூரைச் சேர்ந்த விஷ்ணு சர்மா போலீசில் புகார் அளித்தார். விஷ்ணு கொடுத்த தகவலின் அடிப்படையில், சவாய் மாதோபூர் போலீசார் ஒரு திட்டத்தை தீட்டினர். ஒரு கான்ஸ்டபிள் மணமகனாக நடித்தார். அவர்கள் ஒரு புரோக்கர் மூலம் பாஸ்வானை திருமணம் செய்து கொள்வதாக கூறி, பின்னர் அவர் போபாலில் கைது செய்யப்பட்டார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

