இதுகுறித்து, கேரளத்தின் பேரிடர் மேலாண்மை அதிகாரி கூறுகையில், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில், 204.4 மி.மீ. அளவிலான அதிதீவிர கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஆரஞ்சு அலர்ட் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில், 115.6 மி.மீ. அளவிலான மிக கன மழையும் பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துடன், அதி தீவிர கனமழை மேலும் பல முக்கிய பாதிப்புகளை உண்டாக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த நேரத்தில் அதிகளவிலான மழை பெய்யவுள்ளதால் பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயமுள்ளதாகவும்; மலைப்பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்படக் கூடும் எனவும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், அரசுத் துறைகள் விரைந்து எச்சரிக்கையுடன் செயல்பட வலியுறுத்தப்பட்டதுடன், எச்சரிக்கை மிகுந்த பகுதிகளில் வாழும் மக்கள் விரைவாகப் பாதுகாப்பான முகாம்கள் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: கர்நாடகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’! 5 பேர் பலி