மழையால் விவசாயிகளுக்கு பாதிப்பு
தென்மேற்கு பருவமழையால் தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், அறுவடைக் காலத்தில் உள்ள பருத்தி, நெல் உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனை எதிர்கொள்ள முதலமைச்சர் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறார். இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் ஏ.வி. வேலு, மா. சுப்பிரமணியன், சேகர் பாபு, கே.என். நேரு, ஐ. பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
