கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாகக் கூறப்படும் நபர்கள் மீது நாடு தழுவிய கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், ஷாஜாத்தின் கைது நடந்துள்ளது.
