120 வந்தே பாரத் ரயில்களை உருவாக்குவதற்கும் அவற்றை 35 ஆண்டுகளாகப் பராமரிப்பதற்கும் ரூ.30,000 கோடி ஒப்பந்தத்தை ரஷ்ய இந்திய நிறுவனங்களின் கூட்டமைப்பு வென்ற பிறகு, கூட்டு நிறுவனத்தில் எவ்வளவு பங்கு வைத்திருப்பது தொடர்பான சர்ச்சையைத் தீர்த்துள்ளது.
இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் உள்ள நவரத்னா நிறுவனமான ரயில் விகாஸ் லிமிட்டெட் (RVNL) மற்றும் ரஷ்ய நிறுவனம் Metrowagonmash ஆகிய இரண்டு நிறுவனங்களும் கூட்டாக இந்திய ரயில்வே ஒப்பந்தத்தை வென்றுள்ளன.
RVNL மற்றும் Metrowagonmash ஆகிய நிறுவனங்கள் இணைந்து வந்தே பாரத் டெண்டருக்கு ஏலம் எடுப்பதற்கும், திட்டத்தை செயல்படுத்த சிறப்பு நோக்க வாகனத்தை (SPV) உருவாக்குவதற்கும் ஒப்பந்தம் செய்தன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ரஷ்ய நிறுவனம் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருக்கும்.
இதன்படி ரஷ்யாவின் Metrowagonmash நிறுவனம் 70% பங்குகளையும் , இந்திய ரயில்வேவின் RVNL 25% பங்குகளையும் , LES நிறுவனம் 5% பங்குகளையும் பெற்றிருக்கும். அதன்படி ரஷ்ய நிறுவனம் அதிக பங்குகளை வந்தே பாரத் ரயில் நிறுவனத்தில் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

