ஹைதராபாத்தின் வரலாற்று சிறப்புமிக்க சார்மினார் அருகே உள்ள குல்சார் ஹவுஸில் ஞாயிற்றுக்கிழமை காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. குல்சார் ஹவுஸ் அருகே கிருஷ்ணா பியர்ல்ஸ் நகைக்கடையில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மூன்று மாடிகளைக் கொண்ட கட்டடத்தின் தரைத்தளத்தில் இருந்து மேல் தளங்களுக்கும் தீ மளமளவென பரவியது. இதனைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
