8 மணி நேரம் ஓடும் 35 ஆபாச வீடியோக்களை எதிர்க்கட்சி தலைவர்கள் ஆளும் அரசிற்கு கொடுத்ததையடுத்து இந்த விவகாரத்தில் மகாராஷ்டிரா பாஜக துணை தலைவர் மற்றும் முன்னாள் எம்.பி. கிரித் சோமையாவிடம் விசாரணை நடத்த ஊர்மட்டக்குழு அமைத்துள்ளதாக துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் அறிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து செய்தி வெளியிட்ட மராத்திய செய்தி சேனலான லோக்ஷாஹி எனும் டிவி சேனல் முடக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் இந்த சேனல் இப்போது வெளிவரவில்லை என்று கூறப்படுகிறது.
அமலாக்கத்துறை உள்ளிட்ட ஒன்றிய அரசின் அமைப்புகளை பயன்படுத்துவோம் என மிரட்டி, பெண் அதிகாரிகளை அவர் பாலியல் வலையில் சிக்க வைத்துள்ளதாக மகாராஷ்டிர முன்னாள் எம்.பி. கிரித் சோமையா புகார் எழுந்துள்ளது.


