Last Updated:
Karachi Bakery | கராச்சி பேக்கரி 1953ல் ஹைதராபாத்தில் துவங்கியது. ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கையால் பெயர் மாற்ற போராட்டம் நடந்தது.
ஐதராபாத்தில் உள்ள பல்வேறு இடங்களிலும் விசாகப்பட்டினத்திலும் ‘கராச்சி பேக்கரி’ என்ற பெயரில் புகழ்பெற்ற பேக்கரி கடை உள்ளது.
தேசப்பிரிவினையின்போது கராச்சியிலிருந்து இந்தியாவுக்கு வந்த கான்சந்த் ராம்னானியா என்பவர் கடந்த 1953 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் கராச்சி பேக்கரியை துவக்கினார். அதனை தொடர்ந்து பல கிளைகளுடன் செயல்பட்டு வரும் கராச்சி பேக்கரி இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பிரச்சனை ஏற்படும் சமயங்களில் பிரச்சனைக்கு உள்ளாவதும் வழக்கம்.
தற்போது ஆபரேஷன் சிந்துர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் ஐதராபாத்தில் உள்ள கராச்சி பேக்கரியை அணுகிய சிலர் அந்த பேக்கரியின் பெயரை மாற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பேக்கரியின் பெயர் பலகை மீது கருப்பு துணியை போர்த்தி அந்த பெயரை மறைக்கவும் முற்பட்டனர்.
இந்நிலையில் கராச்சி பேக்கரி உரிமையாளர்களான ராஜேஷ், ஹரி ராம்னானி ஆகியோர் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில், “கராச்சி பேக்கரி என்ற பெயரிலான எங்களுடைய கடைகள் கடந்த 1953 ஆம் ஆண்டு முதல் ஹைதராபாத்தில் செயல்பட்டு வருகின்றன. கராச்சி பேக்கரி என்பது பாகிஸ்தான் பிராண்ட் கிடையாது. இது ஒரு இந்திய பிராண்ட். எங்களுடைய கடைகளின் வணிக பெயரை மாற்றத்திற்கு உட்படாமல், மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். மேலும் எங்களுடைய கடைகளில் தற்போது தேசியக் கொடியை ஏற்றி வருகிறோம்” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து கராச்சி பேக்கரி கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
May 09, 2025 12:05 PM IST
Karachi Bakery | இந்தியா – பாக்., மோதலில் சர்ச்சையான பேக்கரி… பெயருக்கு காரணம் இதுதான்… கடை உரிமையாளர்கள் கொடுத்த விளக்கம்!

