Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

போர் பதற்றம்: வான்வழித் தாக்குதல் நடந்தால் பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்…? முழுமையான விவரங்கள் இதோ…

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 17, 2025
in அரசியல் செய்திகள்
0
போர் பதற்றம்: வான்வழித் தாக்குதல் நடந்தால் பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்…? முழுமையான விவரங்கள் இதோ…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்த தாக்குதலை அடுத்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் தற்போது அதிகரித்து வருகிறது. இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனையடுத்து கடந்த வியாழக்கிழமை, இரு தரப்பிலிருந்தும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் ஏவப்பட்டன.

ஆனால், அதிர்ஷ்டவசமாக இதுவரை உயிர் அல்லது சொத்து இழப்பு குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வருவதை உலகமும் கவனித்துக் கொண்டிருக்கிறது.

இந்தியா தனது குடிமக்களைப் பாதுகாக்கவும், போர் சூழல் ஏற்பட்டால் மக்கள் என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்களுக்குக் கல்வி கற்பிப்பதற்காக, இந்திய அரசாங்கம் பல மாநிலங்களில் மாதிரி பயிற்சிகளைத் தொடங்கியுள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், நீங்கள் வசிக்கும் பகுதியில் வான்வழித் தாக்குதல் நடந்தால், உங்களையும், உங்கள் அன்புக்குரியவர்களையும் எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்? என்பதைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வோம்.

விமானத் தாக்குதல் ஏற்பட்டால் விமானப்படை என்ன செய்யும்?

எதிரியின் பக்கத்திலிருந்து ஏதேனும் ராக்கெட், ஏவுகணை அல்லது போர் விமானம் போன்றவை நமது எல்லைக்குள் நுழைந்தால், விமானப்படை ரேடார்கள் அதை உடனடியாகக் கண்டறிந்து, தாக்குதல் பற்றிய தகவலை உடனடியாகத் தருகின்றன. எதிரி நாட்டில் இருந்து ஒரு ஏவுகணை தாக்கப்பட்டால், அதன் இயக்கத்தின் திசை குறித்த எச்சரிக்கையும் அனுப்பப்படும். மேலும், தாக்குதலுக்கு சில விநாடிகளுக்கு முன்பு, சாத்தியமான இடங்களில் சைரனும் ஒலிக்கத் தொடங்கும், இதன் மூலம் மக்கள் பாதுகாப்பாக ஒளிந்து கொள்ள எச்சரிக்கப்படுவார்கள்.

சைரன் ஏன், எப்போது ஒலிக்கிறது?

விமானத் தாக்குதல் அல்லது ஏவுகணைத் தாக்குதல் போன்ற பெரிய ஆபத்து நிகழவிருக்கும்போது, ​​சைரன் ஒலிக்கிறது. சைரனின் எச்சரிக்கை சத்தத்தைக் கேட்டவுடன், நீங்கள் உடனடியாக சுரங்கப்பாதைக்குச் சென்று அங்கே ஒளிந்து கொள்ள வேண்டும். பெரிய நகரங்களில் கட்டப்படும் சுரங்கப்பாதைகள் வான்வழித் தாக்குதல்களைத் தவிர்ப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், பேருந்துகள் மற்றும் லாரிகள் போன்ற கனரக வாகனங்கள் அவற்றின் மீது மட்டுமே செல்ல முடியும். இதன் காரணமாக, ராக்கெட்டுகள் அல்லது ஏவுகணைகளின் தாக்கம் அதன் மீது மிகக் குறைவு என்றே சொல்லலாம்.

  • விமானத் தாக்குதல் நடந்தால், நீங்கள் திறந்தவெளியில் இருந்தால், உடனடியாக உயரம் குறைவாக உள்ள மேம்பாலத்தின் கீழ் செல்லுங்கள்.
  • நீங்கள் ஒரு கட்டிடத்தில் இருந்தால், சைரன் ஒலித்தவுடன் கட்டிடத்தின் மெயின் நுழைவாயிலில் இருந்து விலகிச் செல்லுங்கள். ஒரு சுவர் அல்லது ஜன்னல்கள் மட்டுமே உள்ள கட்டிடத்தில் நிற்பதைத் தவிர்க்கவும்.
  • வெளிப்புறத்தில் சுவர் புறணி உள்ள பகுதிக்கும் நீங்கள் செல்ல வேண்டும், அதாவது கழிப்பறைகள் அல்லது படிக்கட்டுகளுக்கு அடியில் உள்ள பகுதி பாதுகாப்பானது.
  • நீங்கள் கழிப்பறைகள் அல்லது படிக்கட்டுகளுக்கு அடியில் உள்ள பகுதிக்கு செல்ல வேண்டும். ஏனெனில், அது பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.
  • விமானத் தாக்குதல் சைரன்கள் பொதுவாக உரத்த, கூர்மையான ஒலியைக் கொண்டிருக்கும். மேலும், அவை மெதுமெதுவாக மங்கியும் போகும்.
  • சைரனின் ஒலி அதிகரிப்பது அல்லது குறைவது, தாக்குதல் குறித்த எச்சரிக்கையைக் குறிக்கிறது. 1 முதல் 3 நிமிடங்கள் வரை சைரன் ஒலித்தால், மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று அர்த்தம்.
  • அதிகரிப்பதோ அல்லது குறைவதோ இல்லாமல், ஒரு நிமிடம் தொடர்ந்து நீடிக்கும் ஒற்றை சைரன் சத்தமானது ஆபத்து முடிந்துவிட்டது என்று அர்த்தம். இந்த சைரனை அடுத்து மக்கள் வெளியே வரலாம்.
  • விமானத் தாக்குதலில் இருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?

  • சைரன் சத்தம் கேட்டவுடன், உடனடியாகப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுங்கள்.
  • வீட்டில் உள்ள அனைத்து எலக்ட்ரானிக் மற்றும் கேஸ் டிவைஸ்கள் உட்பட அனைத்தையும் ஆஃப் செய்து விடுங்கள்.
  • வீட்டில் உள்ள அனைத்து ஜன்னல்களையும், கதவுகளையும் மூடவும்.
  • தரையில் படுத்துக் கொண்டு தலையை மூடிக்கொள்ளுங்கள்.
  • எமெர்ஜென்சி கிட்டைத் தயாராக வைத்திருங்கள், அதில் உணவுப் பொருட்கள் மற்றும் முதலுதவிப் பொருட்கள் இருக்க வேண்டும்.
  • வதந்திகளில் கவனம் செலுத்த வேண்டாம், அரசாங்க வழிகாட்டுதல்களை மட்டும் பின்பற்ற வேண்டும்.
  • First Published :

    May 09, 2025 12:52 PM IST

    தமிழ் செய்திகள்/இந்தியா/

    போர் பதற்றம்: வான்வழித் தாக்குதல் நடந்தால் பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்…? முழுமையான விவரங்கள் இதோ…



    .

    Previous Post

    திமுகவின் குடுமி சிக்கும்.. அப்போ பேசி தானே ஆகணும்? உதயநிதியின் அன்பு தம்பி ரத்தீஷை குறி வைக்கும் அதிமுக!

    Next Post

    20 கோடி பார்வைகளைக் கடந்த தாராள பிரபு பாடல்!

    Makkal Aanaiyam

    Makkal Aanaiyam

    Authenticated live Tamil flash news

    Next Post
    20 கோடி பார்வைகளைக் கடந்த தாராள பிரபு பாடல்!

    20 கோடி பார்வைகளைக் கடந்த தாராள பிரபு பாடல்!

    Leave a Reply Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *

    • About
    • Advertise
    • Privacy & Policy
    • Contact
    Call us: +91 44 3586 5999

    © GKM Apps | Software development firm

    No Result
    View All Result
    • Home
    • அரசியல் செய்திகள்
    • தமிழ்நாடு செய்திகள்
    • சமீபத்திய செய்திகள்
    • டிரெண்டிங் செய்திகள்
    • ஹாட்ஸ்டார்

    © GKM Apps | Software development firm

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In