இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு குறித்தும் ஐபிஎல் கோப்பையின் வெற்றி குறித்தும் ரெய்னா கூறியதாவது:
இந்த வருடம் ஆர்சிபி ஒரு புதிய அணியாக விளையாடுகிறது. இந்த சீசனில் 150, 136 ரன்களை கூட கட்டுப்படுத்தியுள்ளனர்.
புதிய கேப்டன் ரஜத் படிதார் சிஎஸ்கேவை இருமுறை தோற்கடித்துள்ளார். ஆர்சிபின் ஓய்வறை உற்சாகமாக உள்ளது. இது விராட் கோலிக்கான வெற்றி ஆண்டாக இருக்கலாம்.
ஒரு கோப்பையை வென்ற பிறகு, கேப்டனாக ஒரு வீரரின் மதிப்பும், அவரது முடிவுகளுக்கும் கிடைக்கும் ஆதரவும் மாறுகிறது. அதனால்தான் ஐபிஎல் வெற்றி மிக முக்கியம் எனக் கூறினார்.
17 ஆண்டுகளாக ஆர்சிபி கோப்பை வெல்லாமல் இருக்கிறது. அதனால் இந்த சீசனை அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.
