Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பள்ளி, மத ஸ்தலங்களை குறிவைத்து தாக்கும் பாகிஸ்தான்.. மத்திய அரசு தகவல்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 17, 2025
in அரசியல் செய்திகள்
0
பள்ளி, மத ஸ்தலங்களை குறிவைத்து தாக்கும் பாகிஸ்தான்.. மத்திய அரசு தகவல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:May 10, 2025 11:01 AM IST

பாகிஸ்தான் பயணிகள் விமானங்களை பாதுகாப்பு அரணாக பயன்படுத்தி, எல்லை அருகே பள்ளிகள் மற்றும் மத ஸ்தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தாக்குதல்பாகிஸ்தான் தாக்குதல்
பாகிஸ்தான் தாக்குதல்

பயணிகள் விமானத்தை பாதுகாப்பு அரணாக பாகிஸ்தான் பயன்படுத்துவதாகவும், எல்லை கட்டுப்பாடு கோடு அருகே உள்ள பள்ளிகள் மற்றும் மத ஸ்தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் லியாமிகா சிங் ஆகியோர் மூன்றாம் முறையாக கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தனர்.

அப்போது, கோயில்கள், குருத்வாரா, தேவாலயங்கள், பள்ளிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதாக வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார். பஞ்சாப்பில் இருந்து பாகிஸ்தான் இடையேயான கர்தார்பூர் ஷாகீப் வழித்தடம் மறு உத்தரவு வரும் வரை மூடப்படுவதாக விக்ரம் மிஸ்ரி கூறினார்.

எல்லையோர மாநிலங்களில் 36 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய 300 முதல் 400 ட்ரோன்களை வானிலேயே இடைமறித்து அழிக்கப்பட்டதாக கர்னல் சோபியா குரேஷி தெரிவித்தார். பயணிகள் விமான வழித்தடத்தை பாகிஸ்தான் இன்னும் மூடவில்லை என்றும் பயணிகள் விமானங்களை கேடயமாக பயன்படுத்துவதாகவும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆதாரங்களுடன் விளக்கம் அளித்தார். இந்தியாவின் வான் பாதுகாப்பு சாதனங்களின் இயக்க முறைகளை அறியவும், உளவுத் தகவல்களை தெரிந்து கொள்ளவும் பாகிஸ்தான் முயற்சித்ததாக கூறினர்.

First Published :

May 10, 2025 11:01 AM IST



.

Previous Post

உப்பை குறைத்தால் உயிா் காக்கலாம்!

Next Post

பத்திரிகையில் பெயா் வர அனைவரும் விரும்புகின்றனா்: வக்ஃப் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பத்திரிகையில் பெயா் வர அனைவரும் விரும்புகின்றனா்: வக்ஃப் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

பத்திரிகையில் பெயா் வர அனைவரும் விரும்புகின்றனா்: வக்ஃப் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In