Last Updated:
S-400 பாதுகாப்பு அமைப்பு மற்றும் SCALP ஏவுகணைகளுடன் கூடிய ரஃபேல் போர் விமானங்கள் இந்திய தாக்குதலில் முக்கியமாக இருந்தன.
ரஷ்யாவின் S-400 பாதுகாப்பு அமைப்பும் SCALP ஏவுகணைகளுடன் கூடிய ரஃபேல் போர் விமானங்களும் இந்தியாவின் தாக்குதலில் மிக முக்கியமானதாக உருவாகியுள்ளன.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே 7ஆம் தேதி அதிகாலை இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தியது. 9 தீவிரவாத முகாம்களை தாக்கிய இந்தியா, அந்த தாக்குதலில் பொதுமக்கள் பாதிக்கப்படவில்லை என தெரிவித்திருந்தது.
இதையடுத்து மே 8 மற்றும் 9 தேதிகளின் இடைப்பட்ட இரவில் பாகிஸ்தான் ஆயுதப் படைகள் நடத்திய தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. இதில் S-400 எனப்படும் கவசமுறை மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. S-400 மற்றும் ஆகாஷ் பாதுகாப்பு அமைப்புகள் ஒவ்வொரு தாக்குதலையும் திறம்பட முறியடித்ததால், பாகிஸ்தான் ஏவிய எந்த ஏவுகணையும் இலக்கை அடையவிடாமல் தகர்த்தது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவுடன் 5 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் இந்தியா S-400 பாதுகாப்பு அமைப்பை வாங்க முடிவு செய்தபோது, மோடி அரசு அமெரிக்காவின் அழுத்தத்தை எதிர்கொண்டது. முன்னாள் அதிபர் ஜோ பைடனும், தற்போதைய பிரதமரான டொனால்ட் டிரம்பும், இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தன. அப்போது முன்னாள் அதிபர் டிரம்பிடமிருந்து அச்சுறுத்தல் கூட வந்தது.
ஆனால் S-400 பாதுகாப்பு அமைப்பு பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு எதிராக வான் பாதுகாப்பைப் பலப்படுத்துவதில் இந்தியாவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் என்பதை மோடி அரசு உணர்ந்திருந்தது. தற்போது வரை S-400 பாதுகாப்பு அமைப்பின் மூன்று படைப்பிரிவுகள் இந்தியா வந்துள்ளன. மீதம் உள்ளவை இந்த ஆண்டு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைப்பு 600 கிலோமீட்டர் வரம்பில் உள்ள வான்வழி இலக்குகளை கண்காணித்து அதை முறியடிக்கும் திறன் கொண்டது. எனவேதான் அது இந்திய விமானப்படையில் ‘சுதர்சன் சக்ரா’ என்று அழைக்கப்படுகிறது.
ரஃபேல் விமானங்கள்:
2020 முதல் இந்தியா, பிரான்சிடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கியது. இது இந்தியாவின் வான்வழித் திறனை கணிசமாக மேம்படுத்தியது. ரஃபேல் விமானங்கள் நீண்ட தூரத் தாக்குதல்களை சுலபமாக செய்யும் திறனை கொண்டிருந்தன. SCALP ஏவுகணைகள் பொருத்தப்பட்ட ரஃபேல் விமானங்கள் இருந்ததால், பாகிஸ்தானுக்குள் செல்லாமல், எல்லையிலிருந்து சுமார் 100 கி.மீ உள்ளே இருக்கும் அந்நாட்டின் 12ஆவது பெரிய நகரமான பஹாவல்பூரை இந்திய படைகளால் தாக்க முடிந்தது.
ரஃபேல் விமானங்கள் இருந்ததால் தான் அமெரிக்காவிடமிருந்து பாகிஸ்தான் வாங்கிய F-16 போர் விமானத்திற்கு சமமாக இந்தியாவால் பதிலடி கொடுக்க முடிந்தது. மேலும் இந்த விமானங்கள் வாங்கும்போது எதிர்கட்சியினரால் ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
பாகிஸ்தானை அடக்கிய இந்தியாவின் முக்கிய ஆயுதங்கள்.. S-400, ரஃபேலை வாங்க பிரதமர் சந்தித்த நெருக்கடிகள்!

