இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் 1947ம் ஆண்டு காஷ்மீருக்காக ஏற்பட்ட போர் தான் இரு நாடுகளுக்கு இடையிலான முதல் போராகும். இந்த போர், காஷ்மீரின் உரி, பராமுல்லா மற்றும் பூஞ்ச் ஆகிய இடங்களில் நடந்தது. இப்போது வரை நடைப்பெற்று வரும் போர்களுக்கு மூலக்காரணமாக அமைந்ததே இந்த போர்தான். ஜம்மு காஷ்மீரை பாகிஸ்தான் கைப்பற்ற நினைத்த போது, அந்நாட்டின் மகாராஜா ஹரி சிங், இந்தியாவின் உதவியை நாடினார். அதற்குள்ளாக பாகிஸ்தான் அந்த மாகாணத்திற்குள் ஊடுருவி விட்டது.

