50 தொகுதிகளில் வெற்றி இலக்கு: “படுத்துக்கொண்டே ஜெயிக்கும்” வித்தை
டாக்டர் ராமதாஸ் பேசுகையில், 50 தொகுதிகளில் “படுத்துக்கொண்டே ஜெயிப்பது எப்படி” என்ற வித்தையை தான் கற்றுக்கொடுத்திருப்பதாகவும், அவர்களிடமிருந்தும் யோசனைகளைக் கேட்டறிந்ததாகவும் கூறினார். ஒரு மாதத்தில் தேர்தல் வைக்கப்பட்டாலும், 50 தொகுதிகளில் குறைந்தது 40 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வெற்றி பெறுவது எப்படி, உழைப்பது எப்படி என்பது குறித்து யோசனைகளைப் பரிமாறிக்கொள்வதற்காகவே இந்தக் கூட்டம் கூட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
