மகளிர் உரிமை தொகை பணிகள் 2 கட்டமாக நடைபெறும். முதல் கட்ட விண்ணப்பம் பதிவு முகாம் 24.7.2023 முதல் 4.8.2023 வரையும், இரண்டாம் கட்ட முகாம் 05.08.2023 முதல் 16.8.2023 வரை நடைபெறும்.
ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பம், டோக்கன் மற்றும் உறுதிசீட்டு வழங்கப்படும், ஓரிரு நாட்களில் ரேஷன் கடைகளில் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் குறித்த முழு விபரங்கள் வெளிப்படையாக ஒட்டப்படும்.
பயோ மெட்ரிக் முறையில் பதிவாகாவிட்டால் கூட மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் பணம் கிடைக்காதவர்களுக்கு 2 ம் கட்டத்தில் வழங்கப்படும் யாரும் பதற்றப்பட தேவையில்லை என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

