Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Operation Sindoor : முப்படை வீரர்களுக்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்.. மோடி, அமித் ஷாவுக்கும் பாராட்டு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 16, 2025
in அரசியல் செய்திகள்
0
Operation Sindoor : முப்படை வீரர்களுக்கு நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்.. மோடி, அமித் ஷாவுக்கும் பாராட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:May 11, 2025 3:06 PM IST

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் நடிகர் ரஜினியின் அடுத்த படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது

விமான நிலையத்தில் பேட்டியளித்த ரஜினிகாந்த்விமான நிலையத்தில் பேட்டியளித்த ரஜினிகாந்த்
விமான நிலையத்தில் பேட்டியளித்த ரஜினிகாந்த்

பாகிஸ்தானுக்குள் சென்று அதிரடி தாக்குதல் நடத்திய ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்திய முப்படை வீரர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் நடிகர் ரஜினியின் அடுத்த படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்..

பாகிஸ்தான் நாட்டிற்கு உள்ளேயே சென்று அங்கு இருக்கும் தீவிரவாதிகள் முகாம்களை அளித்த இந்திய ராணுவத்திற்கு மிகுந்த பாராட்டுக்கள் என்று கூறிய ரஜினிகாந்த் இந்த போரை வலிமையாகவும் திறமையாகவும் கையாண்ட பாரத பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, முப்படை அதிகாரிகளுக்கும் முப்படை வீரர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்… நன்றி  என்று தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து கோழிக்கோட்டில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் புறப்பட்டுச் சென்றார்.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா கடந்த 7-ஆம் தேதி ஆபரேஷன் செந்தூர் ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. 3 நாட்கள் இந்தியா நடத்திய அதிரடி தாக்குதலால் பாகிஸ்தான் நிலைகுலைந்து போனது. இந்நிலையில் நேற்று மாலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் நேற்றிரவு ஸ்ரீநகர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளிவந்தன. மேலும், பாகிஸ்தான் அத்துமீறினால் தக்க பதிலடி கொடுப்பதற்கு மத்திய அரசு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, ஆப்கானிஸ்தான் பகுதியில் இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறியிருந்தது. பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்திருந்த நிலையில், ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறையும் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது தொடர்பாக பேசிய ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் இனாயத்துல்லா, பாகிஸ்தானின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று மறுத்துள்ளார்.



.

Previous Post

Turkey: 'நோ பர்மிஷன்' – பாகிஸ்தானுக்கு உதவிய துருக்கி; இந்தியாவின் நடவடிக்கை!

Next Post

`ஜம்மு & காஷ்மீர் மக்களுக்கு என்னுடைய சல்யூட்; பாகிஸ்தானால் இதை மறக்க முடியாது!’ – ராஜ்நாத் சிங் | Rajnath Singh praises army and slams Pakistan IMF debt

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`ஜம்மு & காஷ்மீர் மக்களுக்கு என்னுடைய சல்யூட்; பாகிஸ்தானால் இதை மறக்க முடியாது!’ – ராஜ்நாத் சிங் | Rajnath Singh praises army and slams Pakistan IMF debt

`ஜம்மு & காஷ்மீர் மக்களுக்கு என்னுடைய சல்யூட்; பாகிஸ்தானால் இதை மறக்க முடியாது!' - ராஜ்நாத் சிங் | Rajnath Singh praises army and slams Pakistan IMF debt

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In