Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

குடியரசுத் தலைவரின் குறிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 15, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
குடியரசுத் தலைவரின் குறிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஆளுநரின் வழக்கு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் 14 கேள்விகளை எழுப்பி கூடுதல் விளக்கம் கேட்டிருப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அவா் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவதாகவும் தமிழகத்தின் மூன்று பல்கலைக்கழகங்களில் துணை வேந்தா்களின் நியமன விவகாரத்தில் ஆளுநரின் தலையீடு அதிகரிப்பதாகவும் கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடா்ந்தது.

வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மாநில மசோதாக்கள் குறித்து முடிவெடுப்பதற்கு ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து ஏப்ரல் 8 ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது.

மேலும், இந்தத் தனிப்பட்ட வழக்குடன், சட்டப்பிரிவு 200-ன் கீழ் ஆளுநருக்கு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க எடுத்துக் கொள்ளப்படும் கால அவகாசம் குறித்தும், காலக்கெடுவுக்கு மேல் தாமதம் ஏற்பட்டால் அதற்கான சரியான காரணங்கள் குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசிற்கு தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது. அரசியலமைப்பின் 201-வது பிரிவின் கீழ், குடியரசுத் தலைவரின் முடிவுக்கு எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநர் வழக்கில் மாநில மசோதாக்கள் குறித்து முடிவெடுப்பதற்கு ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், உச்சநீதிமன்றத்திடம் ஆலோசனை கேட்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 143-ன் கீழ் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க அரசியல் சாசனத்தில் கால நிர்ணயம் இல்லாதபோது உச்ச நீதிமன்றத்தால் நிர்ணயிக்க முடியுமா? என்பது உள்பட 14 கேள்விகளுக்கு கூடுதல் விளக்கம் கேட்டுள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்ட குடியரசுத் தலைவர்!

I strongly condemn the Union Government’s Presidential reference, which attempts to subvert the Constitutional position already settled by the Hon’ble Supreme Court in the Tamil Nadu Governor’s case and other precedents.

This attempt clearly exposes the fact that the Tamil Nadu…

— M.K.Stalin (@mkstalin) May 15, 2025

இதனிடையே, ஆளுநர் வழக்கு விகாரத்தில் உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் 14 கேள்விகளை எழுப்பி கூடுதல் விளக்கம் கேட்டிப்பதற்கு உச்ச நீதிமன்றம் தீர்த்துவைத்த பிரச்னையை மீண்டும் தூண்டுவது கண்டனத்துக்குரியது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதள் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

தமிழ்நாடு ஆளுநரின் அதிகாரங்கள் தொடர்பான வழக்கில், வழக்கு மற்றும் பிற முன்னுதாரணங்களின் அடிப்படையில் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தால் தீர்க்கப்பட்ட அரசியலமைப்பு நிலைப்பாட்டைத் தகர்க்க குடியரசுத் தலைவர் மூலமாக உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்ட மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் தூண்டுதலின் பேரில் தமிழ்நாடு மக்களுக்கு எதிராக ஆளுநர் ரவி செயல்பட்டார் என்பதை மத்திய அரசின் இந்த நடவடிக்கை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது.

ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை மத்திய அரசின் முகவர்களாகச் செயல்படும் ஆளுநர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதன் மூலம் பலவீனப்படுத்தும் ஒரு தீவிர முயற்சி இது. இது சட்டத்தின் மகத்துவத்தையும் அரசியலமைப்பின் இறுதி விளக்கவுரையாளரான உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு நேரடியாக சவால் விடுகிறது.

ஆளுநர்கள் செயல்படுவதற்கான கால நிர்ணயம் செய்திருப்பதற்கு குடியரசுத் தலைவர் ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்?

மசோதா ஒப்புதலில் காலவரையற்ற தாமதங்களை அனுமதிப்பதன் மூலம் பாஜக தனது ஆளுநர்களின் தடையை சட்டப்பூர்வமாக்க முயற்சிக்கிறதா?

பாஜக ஆளாத மாநில சட்டப்பேரவைகளை முடக்குவதற்கு மத்திய அரசு விரும்புகிறதா?

நமது நாடு ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கிறது. இந்தக் குறிப்பில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகள், அரசியலமைப்பின் அடிப்படை அதிகாரப் பகிர்வை சிதைத்து, எதிர்க்கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் மாநில சட்டப்பேரவைகளை செயலிழக்கச் செய்யும் பாஜக தலைமையிலான மத்திய அரசின் தீய நோக்கத்தை வெளிப்படுத்துகின்றன. எனவே, குடியரசுத் தலைவரின் செயல் நேரடியாக மாநில அரசின் தன்னாட்சிக்கு சவால் விடுவதாகவும், மாநில அரசை வலுவிழக்கச் செய்யும் முயற்சியாக உள்ளது.

இந்த மோசமான சூழ்நிலையில், அரசியலமைப்பை பாதுகாக்க இந்த சட்டப் போராட்டத்தில் பாஜக அல்லாத மாநிலங்கள், கட்சித் தலைவர்கள் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும். இந்த போரில் நமது முழு பலத்தோடு போராடுவோம்.

தமிழ்நாடு போராடும் , தமிழ்நாடு வெல்லும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.





.

Previous Post

ஊட்டி: “உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க” – மலர் அரியணையில் அமர்ந்து வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்

Next Post

யுபிஎஸ்சி காலண்டர் 2026 வெளியானது.. முதல்நிலை தேர்வு, பிரதான தேர்வு தேதி உள்ளிட்ட விவரம் இதோ

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
யுபிஎஸ்சி காலண்டர் 2026 வெளியானது.. முதல்நிலை தேர்வு, பிரதான தேர்வு தேதி உள்ளிட்ட விவரம் இதோ

யுபிஎஸ்சி காலண்டர் 2026 வெளியானது.. முதல்நிலை தேர்வு, பிரதான தேர்வு தேதி உள்ளிட்ட விவரம் இதோ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In