இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்களில் பாகிஸ்தானில் செயல்பட்ட 2 துருக்கி ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் அதிரடி தாக்குதல்களை நடத்தியது.
இதனைத் தொடர்ந்து, இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கு இடையில் கடுமையான மோதல்கள் ஏற்பட்டு இருநாட்டு ராணுவங்களும் முக்கிய நகரங்களின் மீது தாக்குதல்கள் நடத்தின.
அதில், இந்திய ராணுவத்தின் கட்டமைப்புகள் மீது பாகிஸ்தான் சுமார் 300 – 400 ட்ரோன்களின் மூலம் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதல்களுக்கு, துருக்கியில் தயாரிக்கப்பட்ட ராணுவ ட்ரோன்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்களில், பாகிஸ்தானுக்கு உதவி வந்த துருக்கி ராணுவ நிபுணர்கள் 2 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.