Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

யுபிஎஸ்சி தலைவராக அஜய் குமார் நியமனம் – யார் இவர்?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 14, 2025
in அரசியல் செய்திகள்
0
யுபிஎஸ்சி தலைவராக அஜய் குமார் நியமனம் – யார் இவர்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:May 14, 2025 7:20 AM IST

யுபிஎஸ்சி தலைவராக இருந்த பிரீத்தி சுதன் கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி ஓய்வுபெற்றிருந்தார்.

அஜய் குமார் ஐஏஎஸ்அஜய் குமார் ஐஏஎஸ்
அஜய் குமார் ஐஏஎஸ்

யுபிஎஸ்சி தலைவராக முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்த அஜய் குமாரை நியமித்து மத்திய பணியாளர் அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

யுபிஎஸ்சி தலைவராக இருந்த பிரீத்தி சுதன் கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி ஓய்வுபெற்றார். இந்த நிலையில், யுபிஎஸ்சி தலைவராக அஜய் குமாரை நியமித்ததற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.

1985ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணியில் சேர்ந்த இவர், கான்பூர் ஐஐடியில் பொறியியல் பட்டம் பெற்றார். இதையடுத்து அமெரிக்காவில் உள்ள மினசோட்டா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.

இதையடுத்து இந்திய ஆட்சிப்பணியில் சேர்ந்த இவர், கேரள மாநிலத்தில் ஐடி, கேரள மாநில மின்னணு மேம்பாட்டுக் கழகம் உள்ளிட்ட துறைகளுக்கு செயலாளராக இருந்துள்ளார். இதையடுத்து உள்துறை அமைச்சகத்தின் துணை செயலாளராக பணியாற்றினார்.

மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் 2022ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி வரை பாதுகாப்புத்துறையின் செயலாளராக இருந்தார். இந்த நிலையில் தான் யுபிஎஸ்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய ஆட்சிப்பணி, இந்திய வெளியுறவு சேவை மற்றும் இந்திய காவல் பணி உள்ளிட்ட ஆட்சியாளர்களை தேர்வு செய்யும் யுபிஎஸ்சி குழுவில் 10 பேர் வரை இருக்கலாம். தற்போது இந்த குழுவில் 2 பணிகள் காலியாக உள்ளது. யுபிஎஸ்சி தலைவராக இருப்பவர் அதிகபட்சம் 6 வருடங்களோ அல்லது 65 வயதாகும் வரையோ அப்பதவியில் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்: தயக்கம் காட்டும் வெளிநாட்டு வீரர்கள்

Next Post

பயங்கரவாத எதிா்ப்பில் பிரதமா் மோடியின் புதிய கோட்பாடு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பயங்கரவாத எதிா்ப்பில் பிரதமா் மோடியின் புதிய கோட்பாடு

பயங்கரவாத எதிா்ப்பில் பிரதமா் மோடியின் புதிய கோட்பாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In