Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“அணு ஆயுத மிரட்டலுக்கு அடி பணிய மாட்டோம்…” – ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி திட்டவட்டம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 13, 2025
in அரசியல் செய்திகள்
0
“அணு ஆயுத மிரட்டலுக்கு அடி பணிய மாட்டோம்…” – ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி திட்டவட்டம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:May 13, 2025 4:04 PM IST

பிரதமர் நரேந்திர மோடி ஆதம்பூர் விமானப்படை தளத்தில் வீரர்களை சந்தித்து, “நாட்டுக்காக இன்னுயிரையும் தர வீரர்கள் தயாராக உள்ளனர்” என உரையாற்றினார்.

News18News18
News18

பஞ்சாப் மாநிலம் ஆதம்பூருக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, விமானப்படை வீரர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் சூழல் ஏற்பட்ட நிலையில் கடந்த 7 ஆம் தேதி, ஆதம்பூர் விமானப்படை தளத்தை பாகிஸ்தான் தாக்க முற்பட்டது. இந்த நிலையில் பாகிஸ்தானின் முயற்சிகளை இந்தியா தகர்த்தது.

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாத நிலைகளை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இந்த சூழலில் ஆதம்பூர் விமானப்படைதளத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வீரர்களை உற்சாகப்படுத்தினார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த வீரர்கள், “பாரத் மாதாகி ஜே”, “வந்தே மாதரம்” உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர். இந்த தளத்தை தாக்கியதாக பாகிஸ்தான் கூறியிருந்த நிலையில் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாய் பிரதமரின் பயணம் அமைந்தது.

இந்நிலையில், விமானப்படை வீரர்களுடன் கலந்துரையாடிய பிறகு பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அதில் அவர், “முப்படை வீரர்கள், எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு எனது சல்யூட். நாட்டுக்காக தங்களது இன்னுயிரையும் தர வீரர்கள் தயாராக உள்ளனர். நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களைப் பழி வாங்கிவிட்டீர்கள். நமது எதிரிகள் மீண்டும், மீண்டும் முயன்றும் நமது பாதுகாப்பு அரணையைத் தகர்க்க முடியவில்லை. விமானப்படை வீரர்கள் புதுயுக போர்களத்தில் புதிய வரலாறு படைத்துள்ளனர். ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு போர்க்கலையில் புதிய அத்தியாயத்தை இந்தியா நிகழ்த்தியுள்ளது.

இந்த வரலாற்று தருணத்தில் உங்களுடன் இருப்பதில் பெருமை கொள்கிறேன். “பாரத் மாதா கீ ஜெய்” முழக்கத்தின் வலிமையை உலகம் இப்போதுதான் கண்டிருக்கிறது. நமது முப்படை வீரர்களின் தியாகத்துக்கு இந்தியா என்றென்றும் கடமைப்பட்டிருக்கும். ராணுவ வீரர்களின் சாதனை வருங்கால தலைமுறையினருக்கு ஒரு உந்துசக்தியாக விளங்கும்.

அணு ஆயுத பிளாக் மெயிலுக்கு அடி பணிய மாட்டோம். பாகிஸ்தானின் அணு ஆயுத மோசடியை நாங்கள் கடுமையாக சாடினோம். அணு ஆயுதத் தாக்குதலைப் பொறுத்துக்கொள்ள மாட்டேன். தீவிரவாதிகளையும், அவர்களுக்கு உதவும் நாடுகளையும் பிரித்து பார்க்க மாட்டோம். பாகிஸ்தானில் தீவிரவாதிகள் பதுங்கிக் கொள்ள இடம் இல்லாத அளவுக்கு தாக்கியுள்ளோம். வெறும் 20 நிமிடங்களில் 9 தீவிரவாத முகாம்களை தகர்த்தெறிந்துவிட்டோம். நாம் தீவிரவாத முகாம்களை அழித்ததுடன் பாகிஸ்தான் ராணுவத்தையும் தோற்கடித்துள்ளோம்.

நாங்கள் எதிரிகளின் குகைக்குள் நுழைந்து அவர்களின் முகாம்களை அழித்தோம். பாகிஸ்தானின் தீய திட்டங்கள் ஒவ்வொரு முறையும் தோல்வியடைந்தன. பாகிஸ்தான் பயங்கரவாதிகளை பொதுமக்கள் விமானங்கள் மூலம் பாதுகாத்தது. நமது படையினர் பொறுப்புடன் செயல்பட்டு, பயணிகள் விமானத்தின் மீதான தாக்குதலைத் தவிர்த்தனர். பாகிஸ்தான் டிரோன்கள், ஏவுகணைகள், தளவாடங்கள் இந்தியாவுக்கு நிகரானவை அல்ல.

பாகிஸ்தானுக்கு சமீப நாட்களாக தூக்கமே வரவில்லை. இந்தியாவுடன் மோதினால், அழிவு மட்டுமே கிடைக்கும் என்பதை உணர்ந்துள்ளனர். பயங்கரவாத ஆதரவாளர்கள் இப்போது முழுமையான ஆழிவை சந்திப்பார்கள் என்பது தெரியும். எங்கள் நோக்கம் பாகிஸ்தானைத் தாக்குவது அல்ல. அவர்களின் பயங்கரவாத முகாம்களை அழிப்பதாகும். நமது விமானத்தளங்களுக்கு சிராய்ப்புகூட ஏற்படவில்லை. சண்டை நிறுத்தம் ஒரு சிறிய இடைவெளிதான். பாகிஸ்தான் தாக்கினால், தக்க பதிலடி கொடுப்போம்” எனப் பேசியுள்ளார்.



.

Previous Post

இடிந்த தாய்லாந்து கட்டடத்தில் தேடுதல் பணிகள் நிறுத்தம்!

Next Post

"பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது" திமுக எம்பி கனிமொழி விளக்கம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
"பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது" திமுக எம்பி கனிமொழி விளக்கம்!

"பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது" திமுக எம்பி கனிமொழி விளக்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In