Last Updated:
வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி மீது வலதுசாரி ஆதரவாளர்கள் விமர்சனம், குடும்பத்தினரையும் வசைபாடல். தேசிய மகளிர் ஆணையம் கண்டனம். அரசியல் தலைவர்கள் ஆதரவு.
பாகிஸ்தானுடனான சண்டை நிறுத்தம் குறித்து அறிவித்ததற்காக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி சமூக வலைதளத்தில் வலதுசாரி ஆதரவாளர்கள் விமர்சித்து பதிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தம் தொடர்பாக கடந்த 10 ஆம் தேதி மாலை உடன்பாடு எட்டப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி மீது வலதுசாரி ஆதரவாளர்கள் கடும் விமர்சனத்தை முன் வைத்தனர்.
பாகிஸ்தானுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்காமல் சண்டை நிறுத்த அறிவிப்பை எப்படி வெளியிடலாம் என்று கேள்வியெழுப்பினர். மேலும் அவரது குடும்பத்தினரையும் வசைபாடி இணையதளத்தில் பதிவிட்டனர்.
இதனால், மனவேதனைக்கு ஆளான வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ‘லாக்’ செய்து வைத்தார். விக்ரம் மிஸ்ரி மீதான அவதூறு கருத்துகளுக்கு சசிதரூர், அகிலேஷ் யாதவ், அசாதுதீன் ஓவைசி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் ஐஆர்எஸ் அதிகாரிகள் சங்கமும் விக்ரம் மிஸ்ரிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது. விக்ரம் மிஸ்ரிக்கு எதிராக அநாகரிகமாக பதிவிட்ட நெட்டிசன்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி மீது கடும் விமர்சனத்தை முன்வைத்த வலதுசாரி ஆதரவாளர்கள் : மகளிர் ஆணையம் கண்டனம்

