பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினரால் நடத்தப்பட்டது “ஆபரேஷன் சிந்தூர்’.
அதன் பின்பு, இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்ற நிலை மிகவும் அதிகரித்தது. இரு நாடுகளும் மாற்றி மாற்றி மோதிக் கொண்டன.
இந்தத் தாக்குதலில், ‘இந்தியா ராணுவம் இதைச் செய்தது… அதைச் செய்தது’ என்று பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது.
பின்னர், கடந்த சனிக்கிழமை (மே 10) இரு நாடுகளும் தாக்குதல்களை நிறுத்தின.
இந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவம் எவ்வகையான நடவடிக்கைகளை எடுத்தது என்பது குறித்து இந்திய ராணுவத்தைச் சேர்ந்த இயக்குநர் ஜெனரல் ராஜீவ் காய், விமானப்படை ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி, கடற்படை வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத் ஆகியோர் நேற்று பேட்டி அளித்தனர்.

அதில் இயக்குநர் ஜெனரல் ராஜீவ் காய் பேசியதாவது, “பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாகவே ஆபரேஷன் சிந்தூரைத் தொடங்கியது இந்திய ராணுவம்.
