முன்னதாக இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த மே 8ம் தேதி முதல் மே 10 வரை, 3 நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தது ரஷ்யா. ஆனால் அந்த போர் நிறுத்தம் சரியாக பின்பற்றப்படவில்லை என உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.
உக்ரைன் அதிகாரிகள், போர் நிறுத்தத்தை அறிவித்த சில மணிநேரங்களுக்குள்ளாகவே ரஷ்யா அதனை மீறியதாகத் தெரிவித்துள்ளனர்.
ஜெலன்ஸ்கி இந்த போர் நிறுத்தம் ரஷ்யாவின் வெற்றி தின பிரச்சாரத்துக்கான “நாடக நிகழ்ச்சி’ என விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
போருக்கு முடிவுகட்ட வேண்டுமெனில், முதலில் போர் நிறுத்தம் வேண்டும் என்ற ஜெலன்ஸ்கியின் அழைப்பை மறுத்துவிட்டார் புதின். அதற்கு பதிலாக மே 15ம் தேதி இஸ்தான்புல்லில் உக்ரைனுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தும் திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.
