Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“பஹல்காம் தாக்குதல் முதல் சண்டை நிறுத்தத்தை முதலில் அறிவித்த அமெரிக்கா..” – பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 11, 2025
in அரசியல் செய்திகள்
0
“பஹல்காம் தாக்குதல் முதல் சண்டை நிறுத்தத்தை முதலில் அறிவித்த அமெரிக்கா..” – பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:May 11, 2025 2:49 PM IST

இந்தியா பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் அமெரிக்கா அறிவித்ததைக் குறித்து விவாதிக்க ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடிக்கு சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் கோரிக்கை.

News18News18
News18

இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளன. இருதரப்பும் நாளை பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றன. அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இருநாடுகளும் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை செய்ததாக அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் முதலில் அறிவித்தார். அதன் பிறகே இந்தியா மற்றும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து சண்டை நிறுத்தம் தொடர்பாக அறிவிக்கப்பட்டது. இதனால், இருநாட்டு எல்லை பகுதிகளிலும் அமைதி திரும்பி வருகிறது. இரவில் சில அத்துமீறல்கள் இருந்தாலும் பெரிதாக சண்டை நடக்கவில்லை. இதனால் 3 நாள் சண்டை முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், பிரதமர் மோடிக்கு வலியுறுத்தியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில், ஏற்கனவே கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்ட மாநிலங்களவையின் எதிர்க் கட்சி தலைவராக கடிதம் எழுதியிருந்தேன். அதனை நினைவுகூருங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அந்தக் கடிதத்தில், அதேபோல் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் தற்போது மீண்டும், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், அதனைத் தொடர்ந்து முதலில் அமெரிக்கா சண்டை நிறுத்தத்தை அறிவித்தது, அதன்பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகியவை அந்த அறிவிப்பை வெளியிட்டது குறித்தும் விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு உங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதனை ஆதரித்து மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக நானும் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இந்தக் கோரிக்கையை நீங்கள் ஏற்பீர்கள் என நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், “உடனடியாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

Lok Sabha LoP Rahul Gandhi (@RahulGandhi) and Rajya Sabha LoP Mallikarjun Kharge (@kharge) write to PM Modi for special session of Parliament to discuss the Pahalgam attack, ‘Operation Sindoor’ and the ceasefire announcement by the US. pic.twitter.com/eo5LfkLzIm


— Press Trust of India (@PTI_News) May 11, 2025

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலில் அறிவித்த இன்றைய சண்டை நிறுத்தம் குறித்து மக்களும் அவர்களது பிரதிநிதிகளும் விவாதிப்பது மிகவும் முக்கியம். இதற்காக சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட வேண்டும். வரவிருக்கும் சவால்களைச் சந்திப்பதற்கான நமது கூட்டுத் தீர்மானத்தை நிரூபிக்க இது ஒரு வாய்ப்பாகவும் இருக்கும். இந்தக் கோரிக்கையை நீங்கள் தீவிரமாகவும் விரைவாகவும் பரிசீலிப்பீர்கள் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

“பஹல்காம் தாக்குதல் முதல் சண்டை நிறுத்தத்தை முதலில் அறிவித்த அமெரிக்கா..” – பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம்



.

Previous Post

பணம் பறிப்பு, சட்டவிரோத நடவடிக்கை.. மணிப்பூரில் 24 மணி நேரத்தில் 13 பயங்கரவாதிகள் கைது! ஆயுதங்கள் பறிமுதல்

Next Post

தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In