Last Updated:
ஸ்ரீநகரில் உள்ள ராணுவ அலுவலகத்தை பாகிஸ்தான் தாக்கியதாக பொய்யான தகவல்கள் பாகிஸ்தான் மற்றும் அந்நாட்டு ஆதரவு ஊடகங்களால் பரப்பப்பட்டன.
இந்திய விமானம் விபத்துக்குள்ளானதாக சீனாவை சேர்ந்த தினசரி பத்திரிகை ஒன்று பொய்யான செய்தியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து உண்மை தகவலை மத்திய அரசு தற்போது ஆதாரப்பூர்வமாக கூறியுள்ளது.
பகல்காம் தீவிரவாத தாக்குதலில் இந்தியர்கள் 28 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த 7 ஆம் தேதியில் இருந்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை மேற்கெண்டு வந்த நிலையில், இன்று முதல் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
ஆனால் இதற்கிடையே, இந்தியா குறித்த ஏராளமான பொய்யான தகவல்கள் பாகிஸ்தான் மற்றும் சீன ஆதரவு ஊடகங்களால் பரப்பப்பட்டுள்ளன. இந்தியாவுக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந்த பொய்யான தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.
போலி செய்திகளை எதிர்கொள்ளும் விதமாக மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் தனது சமூக வலைதள பக்கங்களில் இந்தியா மீதான அவதூறு செய்திகளை ஆதாரப்பூர்வமாக வெளிப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் சீனாவின் பிரபல தினசரி பத்திகை ஒன்று காஷ்மீர் பகுதியில் 3 இந்திய ஜெட் விமானங்கள் விபத்துக்குள்ளானதாக செய்தி வெளியிட்டிருந்தது. இதுகுறித்து உண்மை விசாரிக்கப்பட்டபோது, சீன நாளிதழ் வெளியிட்டிருந்த படம் 2019 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தின்போது எடுக்கப்பட்டது என PIB தெரிவித்துள்ளது.
இதேபோன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள அணையை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியதாகவும், ஸ்ரீநகரில் உள்ள ராணுவ அலுவலகத்தை பாகிஸ்தான் தாக்கியதாகவும் பொய்யான தகவல்கள் பாகிஸ்தான் மற்றும் அந்நாட்டு ஆதரவு ஊடகங்களால் பரப்பப்பட்டன. இவை அனைத்தும் பொய்யான செய்திகள் என்று மத்திய அரசு உண்மையை உலகுக்கு தெரிவித்துள்ளது.

