Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

3 மணி நேரத்தில் கொடுத்த வாக்கை மீறிய பாகிஸ்தான்.. மீண்டும் எல்லையில் பறந்துவந்த ட்ரோன்கள்.. அத்துமீறலுக்கு ராணுவம் பதிலடி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 10, 2025
in அரசியல் செய்திகள்
0
3 மணி நேரத்தில் கொடுத்த வாக்கை மீறிய பாகிஸ்தான்.. மீண்டும் எல்லையில் பறந்துவந்த ட்ரோன்கள்.. அத்துமீறலுக்கு ராணுவம் பதிலடி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:May 10, 2025 10:02 PM IST

பாகிஸ்தான் காஷ்மீரில் ட்ரோன் மூலம் மீண்டும் தாக்குதல் நடத்தியதால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தகவல் வெளியிட்டார்.

News18News18
News18

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்தப்பட்டது என்று கூறப்பட்ட நிலையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது.

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே உச்சகட்ட பதற்றம் நிலவிய நிலையில், தாக்குதலை நிறுத்துவதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் ஜெனரல், இந்திய ராணுவத் தளபதி உடன் மாலை 3.35 மணிக்கு தொலைப்பேசியில் தொடர்புகொண்டு உரையாடியதாகத் தெரிவித்தார்.

அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் சனிக்கிழமை மாலை 5 மணி முதல் அனைத்து விதமான ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த இருநாடுகளும் ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்தார். அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை வரும் 12ஆம் தேதி மதியம் 12 மணியளவில் நடைபெறும் என்றும் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.

இந்நிலையில், காஷ்மீரில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. பாக். கோரிக்கையை ஏற்று மாலை 5 மணி முதல் தாக்குதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் ஜம்மு காஷ்மீரின் கதுவா, சம்பா, சுந்தர்பானி, அக்னூர், உதம்பூர், நவ்ஷேராவில் அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதனால் எல்லை பகுதியில் மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது. எனினும் இந்த தாக்குதலை இந்தியா முறியடித்திருக்கிறது. காஷ்மீரின் உதம்பூரில் பாகிஸ்தானின் ட்ரோனை இந்தியா முறியடித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, ஜம்மு காஷ்மீரில் மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதற்கு அம்மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட தாக்குதல் நிறுத்த முடிவு என்ன ஆனது என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், ஸ்ரீநகர் அருகே மீண்டும் வெடி சத்தம் கேட்பதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனிடையே, பாகிஸ்தான் அத்துமீறலை அடுத்து காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலத்தின் எல்லை பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ராஜஸ்தானின் பொக்ரான் பகுதியில் ஒரே நேரத்தில் 8 ட்ரோன்கள் பறந்தன. இதையடுத்து பொக்ரான் நகர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன. குஜராத்தின் கட்ச் மாவட்டத்திலும் ட்ரோன்கள் பறந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், பதற்றமடைய வேண்டாம் என்றும் அம்மாநில அமைச்சர் ஹரிஷ் சிங்வி கேட்டுக்கொண்டுள்ளார். புரிந்துணர்வு முடிவை மீறி பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்துவதால் எல்லைப் பகுதிகளில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது. இதனால் இந்தியாவின் எல்லை பகுதிகளான அமிர்தசரஸ், பதான்கோட், கார்கில், ஜெய்சால்மர், பாட்டியாலா ஆகிய இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. ஹரியானாவின் அம்பாலாவில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

Location :

Jammu Cantonment,Jammu,Jammu and Kashmir

தமிழ் செய்திகள்/இந்தியா/

3 மணி நேரத்தில் கொடுத்த வாக்கை மீறிய பாகிஸ்தான்.. மீண்டும் எல்லையில் பறந்துவந்த ட்ரோன்கள்.. அத்துமீறலுக்கு ராணுவம் பதிலடி!



.

Previous Post

பாகிஸ்தான் நடத்தும் எந்தவொரு பயங்கரவாத தாக்குதலும் போராக கருதப்படும்

Next Post

பாகிஸ்தான் திடீர் தாக்குதல்: ஜம்மு-காஷ்மீரில் இந்திய வீரர் பலி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாகிஸ்தான் திடீர் தாக்குதல்: ஜம்மு-காஷ்மீரில் இந்திய வீரர் பலி

பாகிஸ்தான் திடீர் தாக்குதல்: ஜம்மு-காஷ்மீரில் இந்திய வீரர் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In