டிஜிட்டல் யுகத்தில் போர் என்பது பாரம்பரியமாக நடக்கும் போர்க்களங்களுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. நேரடியாக களத்தில் இந்திய ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், ஆன்லைனில் இந்தியாவுக்கு எதிராக பொய்யான பரப்புரைகளை செய்து பாகிஸ்தான் ஆன்லைன் யுத்தத்தையும் நடத்துகிறது. இதன் மூலமாக அந்நாடு அனுதாபத்தை தேடத் தொடங்கியுள்ளது.
பொய்யான தகவல்களை பரப்புவதன் மூலமாக தனக்கு அனுதாபம் தேடிக் கொள்வதுடன், இந்தியாவுக்கு எதிராக ஏராளமான குற்றச்சாட்டுகளை சொல்லவும் பாகிஸ்தான் வாய்ப்புகளை தேடி வருகிறது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு, பழைய புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை பாகிஸ்தான் பரப்பி வருகிறது. இது பொதுமக்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தானால் திட்டமிட்டு சித்தரிக்கப்படுகின்றன.
அத்துடன் இந்தியாவுக்கு எதிராக தொடர்ச்சியாக பாகிஸ்தான் ஊடகங்கள் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றன. இந்த தகவல்களை பாகிஸ்தான் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகளும் பரப்புகிறார்கள். இத்தகைய டிஜிட்டல் யுத்தத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதற்காக இந்தியாவுக்கு எதிராக பரப்பப்படும் பொய்யான தகவல்கள் கண்டறியப்பட்டு, அவை போலியானவை என்பது உறுதி செய்யப்படுகிறது.
உண்மையை சரிபார்த்தல் Fact Checking நடவடிக்கைகள் மூலமாக, ஏராளமான பொய்யான தகவல்கள் டிஜிட்டல் தளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பாகிஸ்தான் விமானப்படை ஸ்ரீநகர் விமானப்படை தளத்தை குறி வைத்ததாக ஒரு வீடியோ பரப்பப்பட்டது. ஆனால் அந்த வீடியோ காட்சிகள் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கைபர் மாகாணத்தில் நடந்த பாகிஸ்தான் மோதலுடன் தொடர்புடையவை.
இதற்கும் சமீபத்திய வான்வெளி தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இதேபோன்று பாகிஸ்தான் இந்திய படைப்பிரிவு தலைமையகத்தை அழித்ததாக இன்னொரு தகவல்கள் பரவியது. மேலும் இந்திய விமானப்படை விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பொய்யான தகவல்களை பாகிஸ்தான் பரப்பியுள்ளது.
ஆனால் இந்த சம்பவம் 2024 இல் ராஜஸ்தானின் பார்மரில் நடந்த மிக் 29 ரக விமானத்தின் விபத்து குறித்த செய்தியாகும். தொடர்ந்து இது போன்ற படங்களை வெளியிட்டு பொதுமக்களை குழப்புவதை நோக்கமாகக் கொண்டு பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது.
🚨 YOUR SOCIAL MEDIA FEEDS ARE UNDER ATTACK🚨
Beware of suspicious videos related to #IndianArmedForces or the ongoing situation. These are key tools of malicious manipulation.🛑 Don’t fall for it. Don’t spread it.
🔍 Suspect something?
📤 Report to #PIBFactCheck
📱 WhatsApp:… pic.twitter.com/mtsrGRUbic— PIB Fact Check (@PIBFactCheck) May 10, 2025
இதனை முறியடிக்கும் வகையில் தொடர்ந்து இந்திய ராணுவ அதிகாரிகள் பத்திரிக்கையாளர் சந்திப்புகளை நடத்துகின்றனர். டிஜிட்டல் தளங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொய்யான தகவல்கள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த ராணுவ நடவடிக்கையை உணர்ச்சி பூர்வமாக நடத்துவதை விட்டுவிட்டு, இந்திய ராணுவம் அறிவுபூர்வமாக நிலைமைகளை கையாண்டு வருகிறது.
டிஜிட்டல் தளங்களில் இந்திய ராணுவம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையால், பாகிஸ்தான் ஆதரவு தகவல்கள் சர்வதேச சமூக ஊடகங்களால் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.
மேலும் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் போலியான தகவல்கள் இந்தியாவுக்கு எதிராக பரப்பப்பட்டு வருகிறது. போர்க்களங்கள் மட்டுமின்றி டிஜிட்டல் தளங்களிலும் இந்திய ராணுவம் மற்றும் இந்திய அதிகாரிகள் திறமையாக செயல்பட்டு, பொய்யான பரப்புரைகளை முடிவு கட்டுகின்றனர். குறிப்பாக மத்திய அரசின் https://x.com/PIBFactCheck தளத்தில் ஏராளமான போலி செய்திகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. போர்க்களத்தை போன்று இந்த டிஜிட்டல் தளத்திலும் இந்தியாவிற்கு தொடர்ந்து வெற்றி கிடைத்து வருகிறது.
Operation Sindoor : பாகிஸ்தான் பரப்பும் பொய்யான தகவல்கள்.. டிஜிட்டல் தளங்களிலும் தக்க பதிலடி கொடுக்கும் இந்தியா

