திமுகவின் இத்தகைய செயல்கள் மக்களுக்கு நன்மை செய்யும் எண்ணமின்றி, வெறுமனே லஞ்சம் மற்றும் ஓட்டு வாங்குவதற்காக மேற்கொள்ளப்படுவதாக செல்லூர் ராஜு விமர்சித்தார். “மக்கள் இப்போது செருப்பை தூக்கி அடிக்கும் மனநிலையில் உள்ளனர்,” என்று கூறிய அவர், இந்தப் பகுதியில் தாய்மார்கள், பெரியவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் இத்தகைய தடைகளால் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். கட்சிக்காரர்களுக்கு ஆடு வெட்டி பிரியாணி போடும் திமுகவினர், மக்கள் தாகம் தீர்க்க நீர்மோர் பந்தல் வைக்காதது ஏன் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார்.
