Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அதிகாலையில் ஏவுகணை தாக்குதலில் இறங்கிய இந்தியா..! இஸ்லாமாபாத், லாகூர் நகரங்கள் மீது தாக்குதல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 10, 2025
in அரசியல் செய்திகள்
0
India-Pakistan War Live Updates: மூன்றாவது நாளாக தொடரும் தாக்குதல் – பாகிஸ்தான் டிரோன்களை சுட்டு வீழ்த்திய இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், தொடர்ந்து 3ஆவது நாளாக நேற்று மாலையிலேயே பாகிஸ்தான் தரப்பில் இருந்து டிரோன் மூலம் இந்தியாவின் எல்லையோர மாவட்டங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது.

ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநில எல்லைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டது. பாகிஸ்தான் டிரோன்கள் பறந்த பகுதிகளின் மீது உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பாதுகாப்பு நடவடிக்கையாக, விளக்குகளை அணைக்கும்படி உள்ளூர் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதனால் எல்லைப் பகுதிகள் முழுவதும் இருளில் மூழ்கியது. இருள் சூழ்ந்த வானில் ஒளிப்புள்ளியாகத் தெரிந்த பாகிஸ்தான் டிரோன்களை இந்திய ராணுவம் தக்க பதிலடி மூலம் உடனுக்குடன் முறியடித்தது.

காஷ்மீரின் ஸ்ரீநகர் விமான நிலையம் மற்றும் அவந்திபுரா விமான தளத்தின் மீதும் பாகிஸ்தான் டிரோன்களை வீசித் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டது. எனினும் அவற்றை இந்திய ராணுவம் வான் பரப்பிலேயே அழித்தது.

காஷ்மீரின் வடக்கில் பாரமுல்லா தொடங்கி தெற்கே பூஞ்ச் வரை 26 இடங்களில் டிரோன்கள் தென்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது. ஜம்மு நகர், சம்பா, உதம்பூர், பூஞ்ச் பகுதிகளில் டிரோன்கள் பறந்த வண்ணம் இருந்தன.

பஞ்சாப் மாநிலத்தில் பதான்கோட், ஃபசில்கா, லால்கர் ஜட்டா, ராஜஸ்தானின் ஜெய்சால்மர், பார்மர், குஜராத்தின் பூஜ், குவார்பெட் மற்றும் லாகி நாலா ஆகிய இடங்கள் பாகிஸ்தானின் தாக்குதல் இலக்காக இருந்தது. பதிண்டாவில் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் டிரோனின் பாகங்களை காவல்துறையினர் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே, பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஜம்முவில் ஐந்து மாவட்டங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலையில் இருந்து, பாகிஸ்தான் ஏவிய சுமார் 400 டிரோன்களை இடைமறிப்பதிலும், அழிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தும் வகையில் தடுப்பு ஆட்டத்தை மட்டும் மேற்கொண்ட இந்திய ராணுவம், இன்று அதிகாலையில் இருந்து பாகிஸ்தானுக்கு பதிலடியை இறக்கியது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் சியால்கோட் மற்றும் நரோவல் எல்லைகளில் இந்தியப் படைகள் கடும் துப்பாக்கிச் சூட்டைத் தொடங்கின. தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர், ராவல்பிண்டி மற்றும் ஷேக்புரா நகரங்களில் இந்தியாவின் ஏவுகணைகள் தாக்கி பெருத்த சேதங்களை உண்டாக்கின.

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் ஒரு பெரிய குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படும் நிலையில், நூர் கானில் உள்ள பாகிஸ்தான் விமானப்படை தளத்தின் மீதும் இந்தியா தாக்குதல் நடத்தியது. மேலும், ஷோர்கோட்டில் உள்ள ரஃபிகி விமானப்படை தளம் மற்றும் சக்வாலில் உள்ள முரித் விமானப்படை தளம் ஆகியவை தாக்கப்பட்டன.



.

Previous Post

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்: வடமேற்கு ரயில் சேவைகள் ரத்து!

Next Post

இன்றைய தங்கம் விலை நிலவரம்: ‘மீண்டும் உயர்ந்த தங்கம்!’ மே 10, 2025 தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இன்றைய தங்கம் விலை நிலவரம்: ‘மீண்டும் உயர்ந்த தங்கம்!’ மே 10, 2025 தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

இன்றைய தங்கம் விலை நிலவரம்: ‘மீண்டும் உயர்ந்த தங்கம்!’ மே 10, 2025 தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In