Last Updated:
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து இந்தியா, பாகிஸ்தானில் இருந்த தீவிரவாத முகாம்களை தாக்கியது.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு சென்று இந்தியா தீவிரவாத முகாம்களின் மீது தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து அந்த தாக்குதலில் 70க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நேற்றிலிருந்து இந்தியா – பாகிஸ்தான் மோதல் தீவிரமடைந்தது.
இந்தியா மீது டிரோன் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இரவு கராச்சி, இஸ்லாமாபாத் ஆகிய நகரங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் உக்கிரமடைந்ததை அடுத்து, முப்படைகளையும் களமிறக்கியது இந்தியா.
இந்த நிலையில், பாகிஸ்தான் தாக்குதலின்போது ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த முரளி நாயக் என்ற இந்திய வீரர் வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று அல்லது நேற்று முந்தினம் நடந்திருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அவரின் உடல் நாளை அவரது சொந்த கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்திய சாய் மாவட்டத்தை சேர்ந்த கல்லிதண்டா கிராமத்தை சேர்ந்த அவருடன் அதே கிராமத்தை சேர்ந்த மேலும் இருவரும் பணிபுரிந்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்தியா நாடு முழுவதும் அவரின் வீரத்திற்காக தலை வணங்குவதாகவும், அவரின் மரணத்திற்காக துக்கம் அனுசரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Jammu and Kashmir

