ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி, சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் மொத்தம் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மனதை உலுக்கியிருந்தது.
இந்தப் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் ஜம்மு – காஷ்மீர் எல்லையில் இருக்கும் தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது இந்திய ராணுவம். இதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து இந்தப் பெண் இரணுவ அதிகாரிகளுக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவ்வகையில் தமிழ்நாடு ‘பாஜக’வின் முன்னாள் தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன், “நன்றி பிரதமர் அவர்களே…காப்பாற்றப்பட்டது “தாய்”நாடு… தாக்குதலுக்கு பெயர் ‘செந்தூர்’ஆபரேஷன்’ பெண்களை கதற விட்ட தீவிரவாதிகளுக்கு ‘பெண்களின்’ நெற்றி பொட்டை வைத்தே பெயர்…….
