கடந்த ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியப் படை “ஆபரேஷன் சிந்தூர்’ எனும் பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீதும் பாகிஸ்தானின் 4 இடங்களில் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவற்றின் திவிரவாதத் தலைமையகங்கள் தாக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்திருக்கிறது.

பஹவல்பூரில் உள்ள மர்காஸ் சுபனலா, தெஹ்ரா கலனில் சர்ஜால், கோட்லியில் மர்காஸ் அப்பாஸ், முசாஃபராபாத்தில் உள்ள சையத்னா பிலால் முகாம் ஆகிய தளங்கள் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவை.
முர்டிகேயில் மர்காஸ் தைபா, பர்னாலாவில் மர்காஸ் அஹ்லே ஹதீத், முசாஃபராபாத்தில் உள்ள ஷ்வாவாய் நல்லா முகாம் ஆகியவை லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதக் குழுவைச் சேர்ந்தவை.
கோட்லியில் மக்காஸ் ரஹீல் ஷாஹித் மற்றும் சியால்கோட்டில் மெஹ்மூனா ஜோயா ஆகிய இடங்கள் ஹிஸ்புல் முஜாஹிதீனின் முகாம்கள் மற்றும் பயிற்சி மையங்கள் ஆகியவை தாக்குதலுக்கு உள்ளானவை என இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
