Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

54 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைபெறும் பாதுகாப்பு ஒத்திகை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 6, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
54 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடைபெறும் பாதுகாப்பு ஒத்திகை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நாடு முழுவதும் 54 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை(மே 6) போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாத இறுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு எந்நேரமும் இந்தியா பதில் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருக்க பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு பாகிஸ்தானையொட்டிய எல்லையோர இந்திய மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. மேலும், இந்த ஒத்திகையை புதன்கிழமை (மே. 7) நடத்துமாறும் மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

குறிப்பாக, வான்வழித் தாக்குதல் நடந்தால் முன்கூட்டியே பொதுமக்களை எச்சரிக்கை செய்யும் விதமாக பொது இடங்களில் அபாய சைரன் ஒலியை ஒலிபெருக்கி மூலம் ஒலிக்கச்செய்தல்; அண்டை நாட்டில் இருந்து தாக்குதல் நடந்தால் பொதுமக்களை பாதுகாப்பது எப்படி என சிவில் பாதுகாப்பு அமைப்புகள், பொதுமக்கள், மாணவா்கள், தனியார் நிறுவனங்களின் பாதுகாவலா்கள் மற்றும் ஊழியா்கள் உள்ளிட்டோருக்கு உரிய பயிற்சி அளித்தல்; தாக்குதலின் விளைவாக மின்சாரம், இணையதளம் ஆகியவை முழுமையாக முடங்கினால் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியவை குறித்து மாநிலங்களை உள்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

கடைசியாக, இந்தியா – பாகிஸ்தான் இடையே 1971 ஆம் ஆண்டு போர் ஏற்பட்டபோது போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்ற நிலையில், மீண்டும் நாளை பெறவுள்ளது.

போர் பாதுகாப்பு ஒத்திகையை நடத்த கல்பாக்கம், ஆவடி, மீனம்பாக்கம், மணலி ஆகிய பகுதிகளை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.

இதையும் படிக்க: அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆஜராவில்லை என்றால் குற்றச்சாட்டு பதியப்படும்: நீதிபதி எச்சரிக்கை



.

Previous Post

‘ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருக்க காரணமே மோடி தான்’ – வானதி சீனிவாசன் பெருமிதம் Modi is the reason for our safety says Vanathi Srinivasan

Next Post

தலைப்பு செய்திகள்: ‘சென்னையில் ED ரெய்டு! கோயில் குளத்தில் விழுந்து 3 பேர் உயிரிழப்பு’ இன்றைய டாப் 10 நியூஸ்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தலைப்பு செய்திகள்: ‘சென்னையில் ED ரெய்டு! கோயில் குளத்தில் விழுந்து 3 பேர் உயிரிழப்பு’ இன்றைய டாப் 10 நியூஸ்!

தலைப்பு செய்திகள்: ‘சென்னையில் ED ரெய்டு! கோயில் குளத்தில் விழுந்து 3 பேர் உயிரிழப்பு’ இன்றைய டாப் 10 நியூஸ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In