விவகாரத்தின் பின்னணி
கடந்த பிப்ரவரி 2027-ல், மதுரை ஆதீனம் சென்னையில் நடைபெற்ற சைவ சமய மாநாட்டிற்கு செல்லும் வழியில், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அவரது கார் விபத்துக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து, ஆதீனம் அளித்த பேட்டியில், “நம்பர் பிளேட் இல்லாத காரில், குல்லா அணிந்த, தாடி வைத்தவர்கள் என்னை துரத்தி வந்து, காரின் பேரிகார்டை உடைத்து மோதினர். இது என்னை கொலை செய்யும் சதி. நேர்மையானவர்களாக இருந்திருந்தால், காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பார்கள். ஆனால், அவர்கள் மோதிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்,” என குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
