Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Pahalgam Attack : பதிலடிக்கு வலுவாக தயாராகும் இந்தியா.. அடுத்தடுத்த சந்திப்புகளை நிகழ்த்தும் பிரதமர் மோடி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 5, 2025
in அரசியல் செய்திகள்
0
Pahalgam Attack : பதிலடிக்கு வலுவாக தயாராகும் இந்தியா.. அடுத்தடுத்த சந்திப்புகளை நிகழ்த்தும் பிரதமர் மோடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:May 05, 2025 2:46 PM IST

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பிரதமர் மோடி, உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி வருகிறார். ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளித்து, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க திட்டம்.

News18News18
News18

காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான பஹல்காமில், கடந்த 22ஆம் தேதி யாரும் எதிர்பார்க்காத தருணத்தில், பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதல் நிகழ்த்தியதில், அப்பாவி சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்க பிரதமரும், உயர் அதிகாரிகளும் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம், மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில், எல்லை பாதுகாப்புப் படை, அசாம் ரைபிள்ஸ் மற்றும் தேசிய பாதுகாப்புப் படை ஆகியவற்றின் தலைமை இயக்குநர்களும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தனது இல்லத்தில் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌஹான் மற்றும் முப்படைகளின் தளபதிகள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது, உள்துறை செயலாளர் தலைமையிலான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான பதிலடி கொடுக்க வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த நாட்டின் நிலைப்பாடு என்று பிரதமர் கூறியதாக தகவல் வெளியாகியது.

அதேபோல், இந்திய ராணுவத்தின் மீதான தனது நம்பிக்கையை வெளிப்படுத்திய பிரதமர் மோடி, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதற்கு படைகளுக்கு முழு சுதந்திரம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. எப்படி, எந்த நேரத்தில் பதிலடி கொடுப்பது என்றும், இலக்கு என்ன என்பதையும் படைகளே தீர்மானித்துக் கொள்ளலாம் என பிரதமர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில், நேற்று (4ஆம் தேதி) பிரதமர் மோடி, விமானப்படை தளபதி அமர் ப்ரீத் சிங் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பில், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக விமானப்படை தளபதியுடன் மோடி ஆலோசித்ததாக தகவல் வெளியாகியது. இப்படி தொடர்ந்து பிரதமர் மோடி சந்திப்புகள் நிகழ்த்திவரும் வரிசையில் இன்று, (5ஆம் தேதி) மத்திய பாதுகாப்புத் துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங்குடன் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

தமிழ் செய்திகள்/இந்தியா/

Pahalgam Attack : பதிலடிக்கு வலுவாக தயாராகும் இந்தியா.. அடுத்தடுத்த சந்திப்புகளை நிகழ்த்தும் பிரதமர் மோடி



.

Previous Post

நீங்க பாதுகாப்பு தருவீங்களா?; இல்ல மத்திய அரசை தர சொல்லட்டுமா? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

Next Post

சீனாவில் 4 சுற்றுலா படகுகள் கவிழ்ந்ததில் 9 பேர் பலி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சீனாவில் 4 சுற்றுலா படகுகள் கவிழ்ந்ததில் 9 பேர் பலி

சீனாவில் 4 சுற்றுலா படகுகள் கவிழ்ந்ததில் 9 பேர் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In