Last Updated:
குழந்தைகள் தற்கொலை செய்து கொள்வதை எந்த மதம் அனுமதிக்கிறது என்று சட்ட வல்லுனர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மத சடங்கு நம்பிக்கையால் 3 நாள் தொடர் உண்ணா நோன்பு… 3 வயது குழந்தை உயிரிழந்த சோகம்!ஜைன மத வழக்கப்படி 3 வயது குழந்தை ஒன்று சந்தாரா முறையில் உயிரிழந்துள்ளது. அந்த குழந்தையின் ஒப்புதல் இன்றி பெற்றோர் மேற்கொண்ட இந்த நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜைன மத வழக்கப்படி துறவிகள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து இந்த உலகத்தை விட்டு பிரிவார்கள். இன்றைக்கும் இந்த சந்தாரா மரணம் ஜைன மதத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விருப்பம் உடையவர்கள் இந்த முறையை பின்பற்றி உலகத்தை விட்டு பிரியலாம்
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 3 வயத குழந்தை வியானா என்பவர் சந்தாரா முறையில் உயிர் நீத்தார். இதுதொடர்பாக அவர் கோல்டன் ரிக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற போதுதான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஐடி துறையில் பணியாற்றும் பியூஷ் மற்றும் வர்ஷா ஜெயினின் மகள்தான் இந்த வியானா. 4 வயதான அவருக்கு மூளையில் கட்டி இருப்பது கடந்த ஆண்டு டிசம்பரில் உறுதி செய்யப்பட்டது. மும்பை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நிலைமை மேலும் மோசம் அடைந்தது.
இதையடுத்து கடந்த மார்ச் 21 ஆம் தேதி ஜைன மதகுரு ராஜேஷ் முனி மகாராஜ் என்பவரை இந்தூரில் சந்தித்து ஆலோசனை கேட்டுள்ளனர். அதன் அடிப்படையில் சந்தாரா முறையில் குழந்தை உலகை விட்டு பிரியலாம் என முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அதன் 10 நிமிடத்திற்கு பின்னர் குழந்தை வியானா உயிரிழந்தது. ஏற்கனவே குழந்தைக்கு உடல்நல குறைவு ஏற்பட்டிருந்த நிலையில், அவர் உயிரிழந்ததாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த குழந்தையின் மரணம் கோல்டன் ரிக்கார்ட்ஸ் என்ற சாதனை புத்தகத்தில் இடம்பெற்றதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
சந்தாரா முறையில் மரணம் அடைந்த உலகின் இளம் வயது நபர் வியானா என்று சாதனை புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து சட்ட வல்லுனர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
அரசியலமைப்பு சட்டம் பிரிவு 25 அனைவருக்கும் மத சுதந்திரம் வழங்குகிறது. அவை ஒருபக்கம் இருந்தாலும் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்வதை எந்த மதம் அனுமதிக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
முன்னதாக 2015 ஆகஸ்ட் மாதம் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் சந்தாராவை சட்டவிரோதமானது என்று கூறி உத்தரவிட்டிருந்தது. இதனை கண்டித்து தேசிய அளவில் ஜைன மதத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அடுத்த மாதமே இந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

