சீன அதிபர் ஸி ஜின்பிங், மே 7 – 10 ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு அரசுமுறைப் பயணமாக ரஷியாவுக்குச் செல்கிறார்.
இந்தப் பயணத்தின்போது ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை சந்தித்து இருதரப்புப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். மேலும், மாஸ்கோவில் நடைபெறவுள்ள வெற்றிநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.
