Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இன்று உலகம் பூமி தினம் : நாசிக்கில் குடிநீருக்காக உயிரைப் பணயம் வைக்கும் பெண்கள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 4, 2025
in அரசியல் செய்திகள்
0
இன்று உலகம் பூமி தினம் : நாசிக்கில் குடிநீருக்காக உயிரைப் பணயம் வைக்கும் பெண்கள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:April 29, 2025 6:30 PM IST

மகாராஷ்டிரா போரிச்சி பாரி கிராமத்தில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை. பெண்கள் கிணற்றில் இறங்கி தண்ணீர் எடுக்கின்றனர். ஜல் ஜீவன் திட்டம் பாதியில் நிற்கிறது. திருமணங்கள் கூட முடியவில்லை.

News18News18
News18

உலகம் இன்று பூமி தினத்தைக் கொண்டாடும் வேளையில், மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள போரிச்சி பாரி கிராமம், மோசமடைந்து வரும் காலநிலை காரணமாக, மக்கள் ஒரு சொட்டு தண்ணீருக்கு கூட தவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் பெண்கள் ஒரு சொட்டு குடிநீர் எடுக்க பாறை சரிவில் இறங்கி கிணற்றுக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

போரிச்சி பாரி என்பது குடிநீர் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கு கூட கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் ஒரு பகுதியாகும். மகாராஷ்டிராவின் சில இடங்களில், மே மாத தொடக்கத்திற்கு முன்பே கிணறுகள் முற்றிலுமாக வறண்டுவிட்டன. குளங்கள் மற்றும் கிணறுகளின் அடிப்பகுதியில் மட்டுமே தண்ணீர் காணப்படுகிறது. இந்தக் கிணற்றிலிருந்து அன்றாட பயன்பாட்டிற்காக தண்ணீர் சேகரிக்க கிராமத்துப் பெண்கள் சாகசப் பயணத்தை மேற்கொள்கின்றனர்.

பெத் தாலுகாவில் அமைந்துள்ள போரிச்சி பாரி கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருகிறது. கிராமத்தில் உள்ள மூன்று கிணறுகளில், ஒரு கிணற்றில் மட்டுமே சிறிதளவு தண்ணீர் உள்ளது, இதன் காரணமாக மக்கள் வேறு வழியில்லாமல் பாழடைந்த கிணற்றுச் சுவர்களில் கயிறுகளைக் கட்டிக் கொண்டு இறங்குகிறார்கள்.

எங்கள் கிராமத்தில் மூன்று கிணறுகள் உள்ளன, ஆனால் அவை முழுக்க முழுக்க மழைநீரையே நம்பியுள்ளன. வழக்கமாக பிப்ரவரி மாத இறுதி வரை இந்தக் கிணறுகளில் இருந்து தண்ணீர் கிடைக்கும். எனவே வேறு வலி இல்லாததால் கிராமப் பெண்கள் தண்ணீர் எடுக்க மூன்று கிலோமீட்டருக்கும் மேல் பயணிக்க வேண்டியுள்ளது. இதைச் செய்ய முடியாதவர்கள் 200 லிட்டர் தண்ணீருக்கு சுமார் ரூ.60 செலவு செய்ய வேண்டும் என்று கிராமத்தின் துணைத் தலைவர் சோம்நாத் நிகுலே கூறியுள்ளார்.

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் பெறுவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டதாகவும், ஆனால் பாதியிலேயே நின்றுவிட்டன என்றும் கிராமத் தலைவர் சோம்நாத் நிகுலே தேசிய ஊடகங்களுக்கு விளக்கினார். ஜல் ஜீவன் மிஷன் என்பது மத்திய அரசின் திட்டமாகும், இது ஒவ்வொரு வீட்டிற்கும் பிரத்யேக குழாய்கள் மூலம் தண்ணீரை வழங்குகிறது. குடிநீர் பிரச்சனையால் கிராம மக்கள் திருமணம் கூட செய்து கொள்ள முடியாத நிலையில் உள்ளனர் என்று கிராமத் தலைவர் கூறியுள்ளார். முப்பது வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் கூட திருமணம் செய்து கொள்வதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜில்லா பரிஷத்தின் கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் அர்ஜுன் குந்தா, தண்ணீர் நெருக்கடி மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு, கிராமத்திற்கு டேங்கர்களில் தண்ணீர் கொண்டு வரவும், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். கிராம மக்கள் விரைவில் குழாய் மூலம் குடிநீர் பெறும் என்றும் அர்ஜுன் குந்தா கூறியுள்ளார். தற்போது வைரலாகும் வீடியோவில் உள்ள காட்சிகள், அரசாங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். கிராம மக்களுக்கு குழாய் நீர் வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நேரத்தில், இதுபோன்ற செயல்கள் நடப்பதாகவும் அர்ஜுன் குந்தா குற்றம் சாட்டுகிறார்.

First Published :

April 22, 2025 10:18 AM IST



.

Previous Post

2026 சட்டமன்ற தேர்தல்; பரபரப்பாகும் கட்சிகள்; அடுத்தடுத்த கூட்டம் நடத்திய அதிமுக, திமுக, பாஜக – நடந்தது என்ன?

Next Post

அதிகரிக்கும் தெருநாய்களின் எண்ணிக்கை: முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த 5 முக்கிய உத்தரவுகள் என்ன?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அதிகரிக்கும் தெருநாய்களின் எண்ணிக்கை: முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த 5 முக்கிய உத்தரவுகள் என்ன?

அதிகரிக்கும் தெருநாய்களின் எண்ணிக்கை: முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த 5 முக்கிய உத்தரவுகள் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In