Last Updated:
கடைசியாக இவர் ஹரியானா மாநில போக்குவரத்து துறையின் கூடுதல் செயலாளராக செயல்பட்டு வந்தார்.
34 ஆண்டு கால பணிக்காலத்தில் 57 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா ஓய்வு பெற்றார்.
கொல்கத்தாவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான அசோக் கெம்கா, 1991ம் ஆண்டு முதல் இந்திய ஆட்சி பணியில் பணியாற்றி வந்தார். நேர்மையான அதிகாரியாக பாராட்டப்படும் இவர் வேறெந்த அதிகாரிக்கும் நடக்காத வகையில் அடிக்கடி பணியிட மாற்றத்திற்கு ஆளாக்கப்பட்டார்.
1965ஆம் ஆண்டு பிறந்த இவர், கரக்பூர் ஐஐடியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்கில் பட்டம் பெற்றார். இதையடுத்து பி.எச்.டி, எம்பி.ஏ, எல்.எல்.பி ஆகிய பட்டங்களை பெற்றார்.
34 ஆண்டு கால அரசுப் பணியில், சராசரியாக அவருக்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை டிரான்ஸ்ஃபர் வழங்கப்பட்டது. 2012ம் ஆண்டு, இவர் வருவாய்த் துறையில் இருந்த போது குருகிராம் பகுதியில் ராபர்ட் வதேராவுக்கு தொடர்புடைய நிலத்தின் உரிமையாளரை மாற்றுவதற்கு மறுப்பு தெரிவித்தபோது தேசிய அளவில் கவனம் பெற்றார்.
கடைசியாக இவர் ஹரியானா மாநில போக்குவரத்து துறையின் கூடுதல் செயலாளராக செயல்பட்டு வந்தார். 10 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் போக்குவரத்து துறையில் இருந்து வேறு பணிக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், கடந்த 4 மாதங்களாக அவர் அந்த பணியில் இருந்துவந்தார்.
அடிக்கடி பணியிட மாற்றம் செய்யப்படுவது குறித்து முன்னர் கருத்து தெரிவித்திருந்த அசோக் கெம்கா, “நேராக இருக்கும் மரம் தான் முதலில் வெட்டப்படும்” என்று கூறினார்.
April 30, 2025 12:47 PM IST

