Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Pahalgam Attack : இந்தியாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்! பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் உறுதி அளித்த அமெரிக்கா

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 2, 2025
in அரசியல் செய்திகள்
0
Pahalgam Attack : இந்தியாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்! பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் உறுதி அளித்த அமெரிக்கா
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:May 01, 2025 7:58 PM IST

இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலாளர் பீட் ஹெக்செத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

News18News18
News18

காஷ்மீர், பஹல்காம் தாக்குதலில் 27 பேர் பலியானதைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் எடுத்துள்ள ராஜாங்க ரீதியான நடவடிக்கைகள், எல்லையில் தொடர்ந்து அவ்வப்பொழுது இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே நடைபெற்றுவரும் துப்பாக்கிச் சண்டைகள், இரு நாடுகளும் மேற்கொண்ட போர் பயிற்சிகள் உள்ளிட்டவை போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை அடுத்து ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்கும் வகையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் தரப்புடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கலந்துரையாடினார்.

இதன்படி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தொலைபேசியில் பேசிய மார்கோ ரூபியோ, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார். இந்தியாவின் பயங்கரவாத ஒழிப்பு முயற்சிகளுக்கு ஒத்துழைப்பதற்கான தனது ஆதரவை மீண்டும் தெரிவித்தார்.

அதேபோல, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் உடன் பேசிய மார்கோ ரூபியோ, தெற்காசியாவில் பதற்றத்தை தணிக்கும் வகையில் அமைதி மற்றும் பாதுகாப்பை பேணவும், இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் வலியுறுத்தினார். மேலும், தீவிரவாதிகளின் கொடூரமான செயல்களுக்கு அவர்களைப் பொறுப்பேற்க வைப்பது என்ற உறுதிப்பாட்டை அவர்கள் இருவரும் வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலாளர் பீட் ஹெக்செத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இது குறித்து அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் கூறுகையில், “இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதலுக்கு வழிவகுத்த பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் அமெரிக்க அரசின் வலுவான ஆதரவு இருக்கும். அமெரிக்கா இந்தியாவுடன் நிற்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

The U.S. Secretary of Defence @PeteHegseth spoke to Raksha Mantri Shri @rajnathsingh earlier today and expressed his deepest sympathies for the tragic loss of innocent civilians in the dastardly terror attack in Pahalgam, Jammu & Kashmir.

Secretary Hegseth said that the U.S.…


— रक्षा मंत्री कार्यालय/ RMO India (@DefenceMinIndia) May 1, 2025

அதேபோல், இந்தப் பேச்சுவார்த்தையின் போது இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “பயங்கரவாத அமைப்புகளை ஆதரிப்பதிலும், பயிற்சி அளிப்பதிலும், நிதியளிப்பதிலும் பாகிஸ்தானுக்கென வரலாறு இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை மற்றும் உரையாடலின் சாராம்சம் குறித்து இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அலுவலக எக்ஸ் பக்கத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



.

Previous Post

சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசு முன் நிற்கும் மிகப்பெரிய சவால்கள் என்னென்ன?

Next Post

Caste Census History: இந்திய சமூக அரசியலை மாற்றியது எப்படி? | Decode

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Caste Census History: இந்திய சமூக அரசியலை மாற்றியது எப்படி? | Decode

Caste Census History: இந்திய சமூக அரசியலை மாற்றியது எப்படி? | Decode

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In