Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Pahalgam Attack : விசாரணைக்குள் வரும் ஓய்வு பெற்ற நீதிபதி? – உச்சநீதிமன்றம் காட்டம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 1, 2025
in அரசியல் செய்திகள்
0
“புகார் அளிக்க காவல்நிலையம் வருவோரை கண்ணியத்துடன் நடத்துக” – உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:May 01, 2025 5:06 PM IST

பஹல்காம் தாக்குதல் தொடர்பான விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி மேற்பார்வையில் நடத்த வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம் இதனை கடுமையாக விமர்சித்தது.

உச்சநீதிமன்றம்உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்து மனுதாரரை உச்சநீதிமன்றம் காட்டமாக விமர்சித்துள்ளது.

காஷ்மீரின் பிரபல சுற்றுலாத்தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதலை நடத்தினர். இதில் பரிதாபமாக 26 சுற்றுலாப்பயணிகள் மற்றும் ஒரு உள்ளூர் குதிரையோட்டி உட்பட 27 பேர் பலியானார்கள். இந்தத் தாக்குதல் இந்தியா முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக வைத்து இயங்கிவரும் லஷ்கர்-இ-தொய்பாவின் இணை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் அமைப்பு முதலில் பொறுப்பேற்றது. பிறகு அந்த அமைப்பு இதனை மறுத்தது. அதேபோல், இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இரு அரசுகளும் ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தற்போது இந்தத் தாக்குதல் தொடர்பாக என்.ஐ.ஏ. அமைப்பு விசாரணை நடத்திவருகிறது.

இந்நிலையில், பஹல்காம் தாக்குதல் குறித்து நடத்தப்படும், விசாரணையை ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் என கோரி ஃபதேஷ் குமார் சாஹு உள்ளிட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் என். கோட்டீஸ்வர சிங் தலைமையிலான அமர்வு முன் வந்தது.

அப்போது நீதிபதிகள், “இந்த முக்கியமான நேரத்தில், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட கைகோர்த்துள்ளனர். இந்த வகையான பொதுநல வழக்குத் தாக்கல் செய்வதன் மூலம் பாதுகாப்புப் படையினரின் மன உறுதியைக் குலைக்க விரும்புகிறீர்களா? இதுபோன்ற பிரச்னையை நீதித்துறைக்குள் கொண்டு வர வேண்டாம்.

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியை விசாரிக்கச் சொல்கிறீர்கள். அவர்கள் புலன் விசாரணையில் நிபுணர்கள் அல்ல, ஆனால் அவர்களால் ஒரு பிரச்னையை தீர்ப்பளித்து முடிவெடுக்க மட்டுமே முடியும். எங்களை உத்தரவு பிறப்பிக்கச் சொல்லாதீர்கள். நீங்கள் எங்கு செல்ல விரும்புகிறீர்களோ அங்கு செல்லுங்கள். நீங்கள் மனுவை திரும்ப பெறுவது நல்லது” என தெரிவித்தனர்.



.

Previous Post

பதிரானா பந்துவீச்சில் புதிய விஷயங்களை முயற்சிக்க வேண்டும்: சிஎஸ்கே பயிற்சியாளர்

Next Post

விஜய் பேச்சை கேட்காத ரசிகர்கள், தொண்டர்கள்! பொதுமக்களுக்கு இடையூறு தந்து அட்டகாசம்! விஜய் சென்ற வாகனம் சேதம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விஜய் பேச்சை கேட்காத ரசிகர்கள், தொண்டர்கள்! பொதுமக்களுக்கு இடையூறு தந்து அட்டகாசம்! விஜய் சென்ற வாகனம் சேதம்!

விஜய் பேச்சை கேட்காத ரசிகர்கள், தொண்டர்கள்! பொதுமக்களுக்கு இடையூறு தந்து அட்டகாசம்! விஜய் சென்ற வாகனம் சேதம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In