முதலமைச்சர் ஆவேச பதில்
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நான் யாரையும் குறிப்பிட்டுப் பேசவில்லை. “ஊர்ந்து” என்ற வார்த்தையை எதார்த்தமாகப் பயன்படுத்தினேன். இது “அன்பார்லிமென்ட்” இல்லை, குழந்தை தவழ்ந்து செல்வது போன்ற ஒரு பொதுவான வார்த்தை தானே? உங்களுக்கு மனதில் ஏதேனும் உறுத்தினால், வேறு யாரையாவது குறிப்பிடுவதாக நினைத்தால், அதை அவையில் சொல்லுங்கள், நான் ஒப்புக்கொள்கிறேன் என முதலமைச்சர் ஆவேசமாக பேசினார்.
