பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ராணுவத்திற்கு பிரதமர் மோடி முழு சுதந்திரம் அளித்துள்ளார். இன்று மாலை பிரதமர் இல்லத்தில் நடந்த உயர் மட்ட கூட்டத்தில், மூன்று ராணுவ தளபதிகளுக்கும் பிரதமர் இந்த சுதந்திரத்தை வழங்கினார். பயங்கரவாதத்திற்கு தகுந்த பதிலடி கொடுப்பது நமது தேசிய உறுதிப்பாடு என்று பிரதமர் கூறியதாக பி.டி.ஐ செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இந்திய ஆயுதப் படைகளின் தொழில்முறை திறன்களில் பிரதமர் மோடி முழு நம்பிக்கை தெரிவித்துள்ளார். எப்போது, எங்கே, எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மூன்று ராணுவ தளபதிகளே முடிவு செய்யலாம் என்று அவர் கூறியுள்ளார்.
