Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“மாதம்தோறும் ரூ.1 லட்சம் சேமிக்கிறேன்” – இணையத்தில் வைரலாகும் பெங்களூரு பெண்ணின் பதிவு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 29, 2025
in அரசியல் செய்திகள்
0
“மாதம்தோறும் ரூ.1 லட்சம் சேமிக்கிறேன்” – இணையத்தில் வைரலாகும் பெங்களூரு பெண்ணின் பதிவு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பெங்களூருவில் தான் தனியாக வசிப்பதாகவும், மாதந்தோறும் சுமார் ரூ.70,000 செலவழிப்பதாகவும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். “நான் வீட்டிலிருந்தபடியே தான் வேலை செய்கிறேன். நான் வசிக்கும் 1 படுக்கையறை கொண்ட பிளாட்டுக்கு ரூ.27,000 வாடகை செலுத்துகிறேன். நெட்ஃபிளிக்ஸுக்கு ரூ.199; கிளாட் ப்ரோவுக்கு ரூ.2,000, உணவுக்கு ரூ.15,000; வெளியே சாப்பிட ரூ.10,000; தண்ணீர் பில் ரூ.499; மின்சாரம் ரூ.700 மற்றும் ஒவ்வொரு மாதமும் தனது பெற்றோருக்கு பரிசுகள் அல்லது பொருட்கள் வாங்குவதற்காக ரூ.10,000” என்று அவர் தனது செலவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

“என்னால் சரியாகச் சொல்ல முடியாவிட்டாலும், மாதத்திற்கு எப்படியும் ரூ.70,000 செலவாகிவிடும். அதேபோல் மாதம்தோறும் சுமார் ரூ.1 லட்சம் சேமிக்கிறேன். தைவிட என்னால் சிறப்பாகச் சேமிக்க முடியும் என்றாலும் என்னுடைய இளமைப் பருவத்தின் சந்தோஷத்தை இழக்க நான் விரும்பவில்லை” என்று தனது பதிவில் கூறியுள்ளார். மேலும் அவர் மது அருந்துவதில்லை, புகைப்பதில்லை அல்லது பார்டிக்கு செல்வதில்லை என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், “இவ்வுளவு அதிக சம்பளத்தை நான் எப்படிப் பெறுகிறேன் என்றால், குறுகிய காலத்திற்குள்ளேயே பல நிறுவனங்களுக்கு மாறினேன். நான் ஏதோ உயர்தரமான கல்லூரியில் எல்லாம் படிக்கவில்லை. VIT-க்கு நிகரான கல்லூரி ஒன்றில் தான் படித்தேன். நீங்கள் படிக்கும் கல்லூரிக்கும் வாங்கும் சம்பளத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார். இவரது பதிவு வேலை மற்றும் சம்பளம் குறித்த ஆர்வத்தைத் தூண்டியுள்ளதோடு சமூக ஊடக பயனர்களிடமிருந்து பல்வேறு எதிர்வினைகளைத் பெற்றுள்ளது.

“நீங்கள் 23 வயதில் 1.7 லட்சம் சம்பளம் வாங்குகிறீர்கள் என்றால், தயவுசெய்து எங்களை என்ன வேண்டுமென்றாலும் கிண்டல் செய்துகொள்ளுங்கள்” என்று ஒரு யூசர் நகைச்சுவையாக கூறியுள்ளார். “நீங்கள் வீட்டிலிருந்தபடி தான் வேலை செய்கிறீர்கள். பின்னர் ஏன் ஒரு படுக்கையறை கொண்டு ஃபிளாட்டிற்கு மாதம் ரூ.27,000 செலவு செய்கிறீர்கள் என புரியவில்லை” என்று மற்றொருவர் கேட்டுள்ளார்.

“உங்கள் மன அமைதிக்காக நீங்கள் செலவு செய்யும் வரை, உங்கள் பெற்றோரை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் வரை, நீங்கள் செலவழிப்பதை விட அதிகமாக சேமிக்கும் வரை, நீங்கள் சரியான பாதையில் தான் செல்கிறீர்கள்” என்று இன்னொரு யூசர் தெரிவித்தார்.

“உங்கள் சம்பளத்தில் 50% க்கும் அதிகமாக நீங்கள் சேமிக்கிறீர்கள். நீங்கள் செய்வது தவறு என சொல்பவர் நிச்சயமாக முட்டாளாக தான் இருப்பார்” என்று மற்றொருவர் யூசர் கூறியுள்ளார்.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

April 28, 2025 7:07 PM IST



.

Previous Post

இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் அமைதி திரும்ப ராஜீய வழியில் தீா்வு: நவாஸ் ஷெரீஃப்

Next Post

3 நாள்களுக்கு போா் நிறுத்தம்: புதின் அறிவிப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
3 நாள்களுக்கு போா் நிறுத்தம்: புதின் அறிவிப்பு

3 நாள்களுக்கு போா் நிறுத்தம்: புதின் அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In